Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கறுப்பு பூஞ்சையால் பறிபோன 30 பேரின் கண் பார்வை... என்னாச்சு? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

கருப்புப் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் 30 பேரின் கண் பார்வை பறிபோய் விட்டதாக கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கருப்புப் பூஞ்சை தொற்று முற்றிய நிலையில் வந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 பேரின் கண்பார்வை பறிபோய் விட்டதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும் டாக்டர் நிர்மலா கூறியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் அதிகம் , சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லாவிட்டாலும் கட்டுப் பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 30 பேர் நோய்த் தொற்றின் தீவிரத்தால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளனர்.

30 பேரின் பார்வை போனது

30 பேரின் பார்வை போனது

30 பேரின் கண்பார்வை பறிபோனதற்கான காரணம் குறித்து கோவை மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டு அழுகிய சதை திசுக்கள் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்படுகிறது.

எண்டோஸ்கோபி

எண்டோஸ்கோபி

ஆய்வு முடிவின் அடிப்படையில் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, மூக்கு எலும்புகள் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டுள்ளது.

30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் குணமடைந்துள்ளனர்.

பார்வை பறிபோகக் காரணம்

பார்வை பறிபோகக் காரணம்

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், சுமார் 30 பேர் கருப்புப் பூஞ்சை தொற்று முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய பார்வை பறிபோய்விட்டது. ஆனால், அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்திவிட்டோம். ஆரம்ப நிலையிலேயே தொற்றைக் கண்டறிந்துவிட்டால் பரிபூரணமாகக் குணமாக்கி விடலாம். தாமதித்தால் கண்பார்வை இழப்பு, உயிரிழப்பு ஏற்படும்.

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை

கறுப்பு பூஞ்சை நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி, 'ஆம்பொடரிசின் பி' எனப்படும் மருந்தையும் கொடுக்க வேண்டும். இந்த மருந்து நமது மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது. பொதுமக்கள் யாரும் கருப்புப் பூஞ்சை தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு உள்ளபோதோ அல்லது தொற்றில் இருந்து மீண்ட பிறகோ மூக்கடைப்பு, மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணைச் சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் பார்வைக் குறைபாடு, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கண் பாதிப்பு

கண் பாதிப்பு

துணியால் ஆன முகக்கவசம் அணிபவர்கள், முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை அணியக் கூடாது. தினமும் முகக் கவசத்தைத் துவைத்து, காயவைத்து உபயோகிக்க வேண்டும். ஒரே முகக்கவசத்தைத் தொடர்ச்சியாக உபயோகிக்கக் கூடாது என்றும் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

உயிர் இழப்பு

உயிர் இழப்பு

மூக்கு வழியாக செல்லும் இந்த நோய்த் தொற்று சைனஸ் வழியாக கண்ணிற்கு சென்று கண் பாதிக்கப்படுகிறது. அதே போல் கண் வழியாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி உயிர் இழப்பு வரை ஏற்படுகிறது. இதனால் நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். கருப்புப் பூஞ்சை நோய் தொற்றுக் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரம் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+