ஊட்டியை கலக்கிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குறித்து கோவை அன்னபூர்ணா சீனிவாசன் உருக்கமான பேச்சு
கோவை: நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலம் கலெக்டராக இருந்தவர் இன்னசென்ட் திவ்யா, இவருக்கு சுயசக்தி விருதுகள் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன், ஊட்டியில் கலெக்டராக இருந்த இன்னசென்ட் திவ்யா, எந்த அமைச்சர், எந்த அதிகாரி, எந்த அரசியல்வாதி சொன்னாலும் கேட்க மாட்டார். ஊட்டியில் போர் போட முடியாத நிலை வந்தது என்றால் அதற்கு இவர் தான் காரணம் என்றார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கடந்த வாரம் நடந்த அவதாரின் சுயசக்தி விருதுகள் நிகழ்ச்சியில் ஊக்கமளிக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் வழங்கினார். அவருக்கு விருது வழங்கிய பின் பேசிய சீனிவாசன், ஊட்டியில் நீண்ட காலம் கலெக்டராக சர்வீஸ் செய்தவர் இன்னசென்ட் திவ்யா.. நார்மலாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கலெக்டர்களை மாற்றுவார்கள்..

ஏன் அவரை நீண்ட காலம் கலெக்டராக சர்வீஸ் செய்ய விட்டார்கள் என்றால், எந்த எம்எல்ஏ, எந்த அரசியல்வாதி, எந்த மினிஸ்டர் சொன்னாலும் அவங்க கேட்கமாட்டாங்க.. எது சரிஎன்று படுகிறதோ, அதைத்தான் செய்வார்கள்.. அது அவங்களுடைய கேரக்டர்.. அவங்க இருந்த ஐந்து வருடம், ஊட்டியில் ஒரு பில்டிங் அப்ருவலுக்கு கூட அவர் கையெழுத்து போடவில்லை.. விதிமீறலோ, ஒரு கட்டிடம் கட்டுவதோ இருந்தால் முதல் வேலை சீல் வைப்பது தான்.. அவர் அப்படி எல்லாம் செய்தால் தான், வயநாட்டில் நடந்தது மாதிரி ஊட்டியில் நடக்காமல் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.. அதற்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க அவர் அந்த அளவிற்கு அக்கறை எடுத்தார். ஏனெனில் அவரது ஊரில் அந்த அளவிற்கு பசுமையாக இருக்காது.. எனவே இங்கு இருக்கிற பசுமையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திற்காக அவரை நாம் மிகவும் பாராட்ட வேண்டும். இன்னொரு விஷயம், நான் ஓட்டல் இண்டஸ்டரி தலைவர் என்கிற முறையில் அவரை வீட்டில் போய் பார்த்து கேட்டேன். என்னிடம் சிரித்துக் கொண்டே டீ எல்லாம் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக அதை செய்ய முடியாது என்று கூறினார். அவ்வளவு ஸ்வீட் ஆபிசர் அவங்க.. நான் என்ன கேட்டேன் என்றால், ஒரே நைட்டில் ஊட்டியில் யாரும் போர் போடக்கூடாது என்று தடை போட்டு விட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் யாரும் போர் போட முடியாது.. அப்போது அவரிடம் நான், குடிப்பதற்கு தண்ணீருக்கு என்ன செய்வது.. நீங்கள் கொடுப்பீர்களா என்று கேட்டேன்.. தண்ணீர் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை.. தண்ணீர் கொடுக்கவில்லை என்றால், என்னை கேளுங்கள், ஆனால் போர் போடக்கூடாது என்றார்.. போரை சுத்தமாக நிறுத்திவிட்டார்.. நீலகிரி முழுக்க சுற்றினாலும், ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்க முடியாது.. அரை லிட்டர் தண்ணீர் வாங்க முடியாது.. எல்லாவற்றையும் தடை செய்துவிட்டார்..
நீலகிரி மாவட்டத்தில் ஐந்து லிட்டர் அதற்கு மேல் தான் வாங்க முடியும்.. அதேநேரம் ஐந்து லிட்டர் கேன் வாங்கியவர்கள் மீண்டும் கடையில் கொண்டு வந்து கொடுத்தால் தான் மீண்டும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேன் கிடைக்கும்... அந்த சிஸ்டத்தை அவர் தான் கொண்டு வந்தார். அதனால் இன்றைக்கு நாம் பார்க்கிற ஊட்டியினுடைய முழு கிரெடிட் அவங்களுக்குத்தான் சேரும்" இவ்வாறு சீனிவாசன் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications