'இதுதான் எல்.முருகன் கொடுத்த இன்னோவா கார்.. வந்து நல்லா பாருங்க'- கோவை பாஜகவின் வைரல் போஸ்டர்
கோவை: கட்சித் தலைமை பரிசாக அளித்த இன்னோவா காரை பார்வையிட வருமாறு பொதுமக்களிடம் பாஜக மாவட்ட தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்கியது. 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த 20 இடங்களில் களமிறங்கியது. அதில் 4 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

4 தொகுதிகளில் வெற்றி
இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தமிழ்நாடு சட்டசபையில் பாஜக நுழைந்தது. நாகர்கோவில் தொகுதியில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சிஆர் சரஸ்வதி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகிய 4 பேரும் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி தமிழக பாஜகவுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

எல் முருகன்
இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என்று தேர்தல் பரப்புரை சமயத்திலேயே எல் முருகன் அறிவித்திருந்தார். இதனால் உற்சாகத்துடன் வேலை செய்த மாவட்ட தலைவர்கள், நான்கு தொகுதிகளில் பாஜகவின் வெற்றியைச் சாத்தியப்படுத்தினர்

கார்கள் பரிசளிப்பு
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டு ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார்.
Recommended Video

தொண்டர்களுக்கு அழைப்பு
இந்நிலையில், பரிசாக அளிக்கப்பட்ட இந்த இன்னோவா கார் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கும் என்றும் இன்னோவா காரை பார்வையிட அனைத்து தொண்டர்களையும் அழைப்பதாக பாஜக மாவட்டத் தலைமை சமூக வலைத்தளங்களில் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications