கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் ATS ஸ்குவாட் போலீசார் தீவிர விசாரணை
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் ATS பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்ததோடு 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 144 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்காக கோவையில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த கோவை கரும்புக் கடையைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவர் கர்நாடகா மாநிலம், விஜயபுரா பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் டெய்லர் ராஜா தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை கோயம்புத்தூரில் பல இடங்களில் வைத்து வெடிக்கச் செய்தது தெரியவந்தது. இதனால், டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக கோவை 5 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications