Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு..5 பேர் கைது.. நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு எதுவும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவை நகரம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராக இருந்த நிலையில் தீபாவளிக்கு முதல்நாளே கோவையில் உக்கடம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.

 உடல் கருகி இறந்த ஜமேசா முபின்

உடல் கருகி இறந்த ஜமேசா முபின்

கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

டிஜிபி சைலேந்திரபாபு

டிஜிபி சைலேந்திரபாபு

கோவையில் கார் குண்டு வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இருப்பினும் இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம் என்றார்.

 தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி தப்பி ஓடியிருக்கின்றார் அப்போது சிலிண்டர் வெடித்து இருக்கின்றது. வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம். தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாக அவருடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். ஓவ்வொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.

விடிய விடிய சோதனை

விடிய விடிய சோதனை

இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜமேசா முபினின் வீட்டில் காவல் துறையினர் நேற்றிரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

5 பேர் கைது

5 பேர் கைது

முகமது தல்கா,25, முகமது அசாருதீன் ,23, முகமது ரியாஸ் 27, பிரோஸ் இஸ்மாயில் 27, முகமது நவாஸ் இஸ்மாயில் 26 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷா வின் தம்பி நவாப் கானின் மகன் முகமது தல்கா ஆவார். கார் கொடுத்த விவகாரத்தில் முகமது தல்கா கைது செய்யப்பட்டுள்ளார். நவாப் கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

ஜமேஷாவின் உடல் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சட்ட மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ஜெயசிங் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்திய நிலையில், முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஜமேஷாவின் மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+