அமெரிக்காவின் கணக்கு தப்பாய் போகுது! பாகிஸ்தான் வந்து இறங்கிய.. ஈரான் போர் விமானம்! டிரம்ப் ஷாக்
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே சமாதான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா முழுவதுமாக நம்பியிருக்கும் நிலையில், தற்போது நடக்கும் மாற்றங்கள் டிரம்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
குறிப்பாக, பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தில், ஈரானின் போர் விமானங்கள் சில தரையிறங்கியிருக்கின்றன. என்ன நோக்கத்திற்காக இந்த விமானங்கள் இங்கு தரையிறங்கியிருக்கின்றன என்பது அமெரிக்காவுக்கு குழப்பமாக இருக்கிறது.

சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஈரானுடனின் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் நூர் கான் விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு C-130 ரக விமானம், ஈரான் விமானப்படை பயன்படுத்தும் 'பாலைவன நிற' பெயிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. இது ஏப்ரல் 12 முதல் அங்கேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக பாகிஸ்தான் தனது C-130 விமானங்களுக்கு இத்தகைய நிறத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதால், இது ஈரானுடையது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இது தவிர, ஈரானின் 'மெராஜ் ஏர்' நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் ஏப்ரல் 25 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகின்றன. இதில் ஒன்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' வான்வழித் தாக்குதலில் நூர் கான் தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் சேதமடைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தற்போது இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் முற்றிலும் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இது கவனிக்க வேண்டிய மேட்டர்தான்.
புதிய ஹேங்கர்கள் மறைக்கும் முயற்சி
செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் ராணுவம் புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. விமானங்கள் மற்றும் ரொம்பவும் சீக்ரெட்டான ராணுவத் தளவாடங்களை விண்வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாதபடி மறைக்க, நான்கு புதிய ஹேங்கர்கள் அங்கு கட்டப்பட்டுள்ளன. மேலும் சில கட்டுமானப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
இந்தத் தளம் பாகிஸ்தான் விமானப்படையின் 'புராக்ஸ்' எனப்படும் பிரிவின் கீழ் இயங்குகிறது. அதாவது, பாகிஸ்தான் அதிபர், பிரதமர் மற்றும் ராணுவத் தளபதிகள் போன்ற மிக முக்கியமான நபர்கள் பயன்படுத்தும் தளம் இது என்பதால், இங்கே ஈரானிய விமானங்கள் நீண்ட காலம் தங்கியிருப்பது சர்வதேச அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் பார்வை
ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் உள்ள நிலையில், ஈரானிய உளவு மற்றும் சரக்கு விமானங்கள் பாகிஸ்தானில் தங்கியிருப்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, பொதுவெளியில் தெரியாமல் இருக்கும் Flight Signals முடக்கப்பட்டது ஈரானிய விமானங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விமானப்படை தளத்தை தனது முழுமையான ரேடார் கன்ட்ரோலில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. பேச்சுவார்த்தை என்கிற பெயரில், பாகிஸ்தான் தனக்கே விபூதி அடிக்க பார்க்கிறதா? என்றும் அமெரிக்கா சந்தேகமடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications