Rishabam: ரிஷப ராசிக்கு இந்த வைகாசி மாதம் எப்படி?.. அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மிதுன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு வருமானத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். கிரக நிலைகள் நன்றாக இருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத அளவுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும். பண ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணம் கையில் தங்கும். உங்களுக்கான அடையாளம், அங்கீகாரம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பயணங்கள்
தைரியம், வீரியம் நன்றாக இருக்கும். தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். நினைத்த விஷயங்களை சரியாக வெளிப்படுத்துவீர்கள். பேச்சின் மூலமாக மற்றவர்களை வசியப்படுத்துவீர்கள். நிறைய பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அலைச்சல் மூலமாக அனுகூலம் ஏற்படும். நிறைய நல்லவை தேடி வரும்.
வழிபாடு
திருப்பதி தரிசனம் ஏற்படும். திருப்பதி லட்டு கிடைப்பதற்கான யோகம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். முதல்முறையாக செய்யக்கூடிய விஷயங்களில் உங்களுக்கு யோகம் ஏற்படும். சோம்பேறித்தனம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. போட்டி, பொறாமை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
திருமண யோகம்
மூன்றாம் பார்வையாக சனி ரிஷபத்தை பார்ப்பதால் சோம்பேறித்தனம், ஒருவிதமான மன சஞ்சலங்கள் ஏற்படும். மே 15 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு அடுத்தவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். திருமணமாகதவர்களுக்கு திருமணம் உண்டாகும். காதல், திருமணத்திற்கான யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. தோல் அலர்ஜி வருவதற்கான வாய்ப்புள்ளது. முகத்தில் கொப்பளங்கள், ஒற்றை தலைவலி, கண்ணாடி போடும் அமைப்பு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது போன்ற அமைப்பு உள்ளது. இளநீர் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். தொழிலில் வெற்றி, வியாபார விருக்தி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, திருமண யோகம், குழந்தை பாக்கியம், காதல் கைகூடும்.
மதிப்பெண்
நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விரும்பிய துறை கிடைக்கும். கழிவுகள் போகக்கூடிய பாதைகளில் கவனம் தேவை. அலைச்சல்கள் அதிகரிக்கும் காலகட்டம். நேரப் பற்றாக்குறை ஏற்படும். பொறுப்புடன் செயல்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications