திருமணம் நிச்சயமான பெண் கோரக் கொலை.. பொள்ளாச்சியில் இன்னொரு கொடூரம்.. பரபர தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருமணம் நிச்சயமான நிலையில் மாணவி கொடூர கொலை ஏன் ?

    பொள்ளாச்சி: திருணம் நிச்சயிக்கப்பட்ட கோவை தனியார் கல்லூரி மாணவி, பொள்ளாச்சி அருகே கழுத்து அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

    இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து பிரகதி புறப்பட்டு சென்றுள்ளார்.

    மகள் மாயம்

    மகள் மாயம்

    ஆனால் பிரகதி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் மகள் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகள் பிரகதியின் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்தனர். ஆனால் மகளின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பரிதவித்துப்போன பெற்றோர், விடுதியை தொடர்பு கொண்டு, மகளை இன்னும் வராதது குறித்து கேட்டனர். அப்போது விடுதி நிர்வாகத்தினர் மாணவி பிரகதி எப்போதோ கிளம்பிவிட்டார் என்பதை கூறியுள்ளார்கள்.

    கழுத்தறுத்து கொலை

    கழுத்தறுத்து கொலை

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பிரகதியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொல்லப்பட்டது பிரகதி

    கொல்லப்பட்டது பிரகதி

    இதனிடையே ஓட்டன்சத்திரத்தில் இருந்து பூசாரிப்பட்டி வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண், கூட்டமாக மக்கள் நிற்பதை பார்த்து காரில் இருந்து இறங்கி சென்று பார்த்துள்ளார். அங்கு இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்பதை கண்டு அதிர்ந்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்துகதறி துடித்தபடி அழுதனர்.

    காரில் கடத்திக் கொலை

    காரில் கடத்திக் கொலை

    மாணவி பிரகதியை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். நகை பணம் எதுவும் பிரகதியிடம் இருந்து திருடு போகவில்லை என்பதால் வேறு என்ன காரணத்துக்காக மர்மநபர்கள் மாணவியை கடத்தி கொன்றார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    திருமண நிச்சயம்

    திருமண நிச்சயம்

    மாணவி பிரகதி அவரது உறவினரான நாட்டுதுரை என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவர்களுக்கு திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு நிச்சயம் நடந்துள்ளது, வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்தநிலையில் மாணவி பிரகதி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+