கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் வெளியாகுமோ பகீர் தகவல்? சிக்கிய 6 பேரை காவலில் எடுக்கும் என்ஐஏ
கோவை: தமிழகத்தை அதிர வைத்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பில் முபின் என்பவர் உயிரிழந்தார். முபினின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பெருமளவு வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகள் மொத்தம் 6 பேர் கைது செய்யபப்ட்டனர். இந்த 6 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் எனப்படும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

என்.ஐ.ஏ. விசாரணை- 43 இடத்தில் சோதனை
இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்னதாக 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

கோவை சிறையில் 6 பேர்
இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் 6 பேரும் சென்னை பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ. காவலில் எடுக்கிறது
தற்போது முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய மனுவைத் தாக்கல் செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். அதாவது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி, வேறு இடங்களில் திட்டமிட்டிருந்த நாசவேலை சதிகள் உள்ளிட்டவை குறித்து 6 பேரிடமும் விசாரிக்க இருக்கின்றனராம் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications