கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை.. இரவோடு இரவாக மர்ம நபர்கள் கைவரிசை
கோவை: நேற்றைய தினம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு அடகுக் கடை உரிமையாளர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அதைக் கவனித்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து, சுமார் 70 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஞாயிறு இரவு நாடு முழுக்க சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. பொதுவாகச் சிவராத்திரி நாளில் இரவு முழுக்க சிவ பக்தர்கள் தூங்காமல் இருப்பார்கள். இதற்காகக் கோயில்களிலும் விடிய விடியச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கும். அதன்படி நேற்றைய தினம் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்துள்ளது.

கோவை கொள்ளை
அந்தச் சிறப்புப் பிரார்த்தனையில் கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார். இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாதேவ் என்ற பெயரில் அடகுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அடகுக் கடை பின்புறத்தில்தான் ரமேஷின் வீடும் இருக்கிறது. இவர் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுவிட்டார்.
70 சவரன் நகை
அவர் வீட்டில் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்மக் கும்பல் அடகுக் கடைக்குள் நுழைந்துள்ளது. நள்ளிரவில் பின்புறம் இருக்கும் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்மக் கும்பல், அங்கிருந்த நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். சுமார் சுமார் 70 சவரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிவராத்திரி
சிவராத்திரி பிரார்த்தனையை முடித்துக் கொண்டு திரும்பிய ரமேஷ் குமாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஷட்டர் உடைக்கப்பட்டதைப் பார்த்த அவர், கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே தனது கடையில் இருந்து தங்க நகையும், வெள்ளிப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்காநல்லூர் போலீசார், விசாரணையைத் தொடங்கினர். மேலும், மோப்ப நாய்களும் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களும் அங்குச் சென்று, தடயங்களைச் சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணை
அடுத்த கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து, அதன் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்தடுத்து ஆப்பு வைத்த மோடி அரசு! கூனிக்குறுகுது கோவை! புண்படுத்திகிட்டே இருக்கீங்களே! என்னாச்சு? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications