கோயம்புத்துரிலா இப்படி.. 2 மாப்ளையும் ஒரே ஓட்டம்.. "மாமியார்" வீட்ல யாரு பாருங்க.. சபாஷ் கோவை போலீஸ்
கோவை: மனசாட்சியே இல்லாமல், ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார் டிரைவர் ஒருவர்.. எந்த தவறையும் செய்யாத அந்த பெண், இன்னமும் அழுதுகொண்டேயிருக்கிறார்.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. அதே கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் வித்யாதரன்.. 33 வயதாகிறது.. இவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர்.

ஒரே கம்பெனி என்பதால், வித்யாதரனிடம் அந்த பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.. இந்த டிரைவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஒருநாள் திடீரென, அந்த இளம்பெண்ணிடம் சென்று, அவரை காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பெண், நட்பாக மட்டுமே பேசியதாக சொல்லி, வித்யாதரன் காதலை நிராகரித்துள்ளார்.
ஆத்திரம்: இப்படிப்பட்ட சூழலில், இளம்பெண்ணுக்கு, சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது... இதைக்கேள்விப்பட்டதுமே, வித்யாதரனுக்கு ஆத்திரம் வந்தது. அதனால், அந்த பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க முடிவு செய்தார்.. அந்த பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்து அதிர்ந்த மாப்பிள்ளை, கல்யாணமே வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மணப்பெண், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.. வாட்ஸ்அப்பில் ஆபாச போட்டோவை அனுப்பி வைத்தது யாரென்றும் இந்த பெண்ணுக்கு தெரியாததால், நிறையவே குழம்பி போனார்.
காதல் டார்ச்சர்: இதற்கு பிறகு, நடந்தது எதுவுமே தெரியாததுபோல், வித்யாதரன் மறுபடியும் அதே பெண்ணுக்கு காதல் டார்ச்சர் தர ஆரம்பித்தார்.. ஆனால், இப்போதும், காதலை அந்த பெண் ஏற்கவில்லை.. உடனே வித்யாதரன், "நான்தான் மாப்பிள்ளைக்கு உன் போட்டோவை ஆபாசமாக அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேற யாருமே, உன்னை கல்யாணம் செய்ய விடமாட்டேன்" என்று சொன்னதும், அப்படியே வெலவெலத்து போனார் அந்த பெண்.
தன்னுடைய பெற்றோரிடம் இதை பற்றி சொல்லி அழுதுள்ளார்.. உடனே அவர்களும், இதற்கு மேலும் சென்னையில் இருந்தால் ஆபத்து, கோவைக்கு கிளம்பி வந்துவிடும்படி சொல்லி உள்ளார்கள். பிறகு, வேறொரு இடத்தில் மறுபடியும் இந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. இந்த விஷயம் வித்யாதரனுக்கு தெரிந்தது.
திருமண நிச்சயம்: மறுபடியும் கோவைக்கு கிளம்பி வந்தார்.. நிச்சயமானது தெரிந்தும் அந்த பெண்ணின் வீட்டில் யாருமில்லாத நேரமாக பார்த்து, உள்ளே சென்று மிரட்டியிருக்கிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியிருக்கிறார்.. அப்போதும் காதலை அந்த பெண் ஏற்கவில்லை.
இதனால், அந்த பெண் முன்னிலையிலேயே, ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட போட்டோக்களை, 2-வது மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார் வித்யாதரன். மணமகளின் இந்த போட்டோக்களை பார்த்ததுமே அதிர்ச்சியும் ஆத்திரமுமடைந்த மாப்பிள்ளை, உடனே மணப்பெண்ணுக்கு போனை போட்டு சத்தம் போட்டுள்ளார்.
கதறல்: போனிலேயே இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.. இறுதியில், இந்த கல்யாணமே வேண்டாம் என்று இந்த மாப்பிள்ளையும் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இதனால், அந்த பெண் வெடித்துக்கதறி அழுதுள்ளார். இவ்வளவையும் அங்கேயே நின்று, ஜாலியாக பார்த்து ரசித்துள்ளார் வித்யாதரன்.
பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள், வித்யாதரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கு பிறகு பொறுமையிழந்த அந்த பெண், நேராக போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர்.. நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றுவிடாமல், மணப்பெண் சொல்லவும், அத்தனையையும் போலீசார் உண்மை என்று விசாரணையில் கண்டுபிடித்தனர்.

சாதுர்யம்: எனினும், வித்யாதரனை லேசில் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, சாதுர்யமாக கைது செய்ய முடிவு செய்தார்கள்.. இதற்காக, மணப்பெண்ணை வைத்தே வித்யாதரனுக்கு போன் செய்ய சொன்னார்கள்.
அதன்படியே, வித்யாதரனுக்கு போனை போட்ட மணப்பெண், "நீ இந்த அளவுக்கு, என்னை நேசிப்பாய் என்று தெரியாமல் போய்விட்டது.. உன் காதலை நான், இப்போதுதான் புரிந்துகொண்டேன்.. நானும் உன்னை காதலிக்கிறேன்.. நீ உடனடியாக கிளம்பி கோவைக்கு வந்துவிடு" என்று சொல்லி உள்ளார்..
பலநாள் கனவு, பலிக்க போகிறது என்ற ஆசையால், இளம்பெண்ணை திருமணம் செய்ய கோவைக்கு ஓடோடி வந்தார் வித்யாதரன்.. அப்போது மறைந்திருந்த போலீசார், புதுமாப்பிள்ளை வித்யாதரனை, "மாமியார்" வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாம்...!!!
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications