கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரம்.. பிரதமர் மோடியிடம் நேரடியாக மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
கோவை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். கோவைக்கு வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வந்த போது, 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டப்பட்டது. இதன்பின் இரு மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்த தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆனால் திட்ட அறிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில், திடீரென மக்கள் தொகையை காரணம் காட்டி இரு மாவட்டங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் கோவை மற்றும் மதுரை மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த இரு நகரங்களை விட குறைவான மக்கள்தொகை கொண்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னிந்திய வேளாண் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் சாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் 8 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அளித்திருக்கிறார். குறிப்பாக கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் பம்பு செட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடக்க வேண்டும், மனுசுழற்சி செய்யப்பட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியையும் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications