"கிரீன் சிக்னல் வந்தாச்சு.." கோவை எதிர்காலமே மாற போகுது.. வியக்கும் மற்ற மாநிலங்கள்! என்ன ஸ்பெஷல்?
கோவை: தமிழ்நாட்டில் இப்போது கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல நிறுவனங்கள் கோவையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கிடையே கோவையில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவுக்கான அனுமதியை இப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான மாநிலம் என்றால் அது கோவை தான். கோவையின் குளுகுளு கிளைமேட்டிற்கே இங்கு தனியாக ரசிகர்கள் உள்ளனர்.

அதுதான் கோவை: மேலும், தமிழ்நாட்டில் பல இரண்டாம் கட்ட நகரங்கள் இருந்தாலும் கோவை சற்று வித்தியாசமானது. ஏனென்றால் கோவை என்பது ஒரு தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் இல்லை.. விவசாயம் வேண்டுமா விவசாயம் இருக்கு.. தொழிற்சாலைகள் வேண்டுமா தொழிற்சாலை இருக்கு.. ஐடி கம்பெனிகள் வேண்டுமா அதுவும் இருக்கு என ஆல் ரவுண்டு பெர்பாமன்ஸை தரும் நகரமாகவே கோவை இருந்து வருகிறது.
மேலும், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப புது புது தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் ஊராகவே கோவை இருக்கிறது. இப்படிப் பல துறைகளில் தலைசிறந்து இருக்கும் கோவை நகரில் வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன்படி கோவையில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
ராணுவ பொருட்கள்: இப்போது நாம் நமது ராணுவத்திற்குத் தேவையான பல விஷயங்களை இறக்குமதியே செய்கிறோம். அந்த நிலையை மாற்றி ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், ராணுவ வாகனங்களை நமது நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ள மத்திய அரசு, அது தொடர்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் கோவையில் ராணுவ தொழிற்பூங்கா அமைவது மிகப் பொருத்தமாக இருக்கும். கோவையில் ஏற்கனவே மேட்டார் பம்பு, இயந்திர உதிரிப் பாகங்களைத் தயாரிக்கப் பல சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ள நிலையில், அவை இந்த ஆயுத பூங்கா மூலமும் நிச்சயம் பயன் பெறும் எனக் கூறப்பட்டது. இந்த ராணுவ உற்பத்தி பூங்கா சூலூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இது ஏன் முக்கியம்: சூலூர் என்பது கோவை- திருப்பூர் நடுவே உள்ள ஒரு ஊராகும். இங்கு ஏற்கனவே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தளம் உள்ளது. எனவே, இங்கு ரூ. 260 கோடி மதிப்பீட்டில் ராணுவ தொழிற் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையின் எதிர்காலம்.. மேஜர் ஏரியாவில் வருகிறது முக்கிய மாற்றம்.. எல்லாமே மொத்தமா மாறிடும் பாருங்க
இதற்கிடையே சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் சுமார் 370 ஏக்கரில் அமையவுள்ள இந்த தொழில் பூங்காவுக்கு இப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சூலூரில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த ராணுவ தொழிற்பூங்கா அமைகிறது. இதற்கான பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மேற்கொள்ளும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications