கோவை சரவணம்பட்டியில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மாநகராட்சிக்கு கோரிக்கை
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனை நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்கள் எந்த விதத்திலும் வேறு பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.அந்த நிலம் 1993ஆம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மதிற்சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளார் .

இதுகுறித்து 2021ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை எதிர்த்து சிவஞானம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், 19.12.2025 அன்று வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திடீரென நடவடிக்கையை நிறுத்த உத்தரவு வந்ததாக சமூக ஆர்வலரும் , தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளருமான எஸ்.பி. தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக ஆர்வலர் எஸ்பி தியாகராஜன் கூறுகையில், "திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்கள் எந்த விதத்திலும் வேறு பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது , ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் உடனடியாக இடித்து மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமும் பலமுறை தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் இங்கு அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகராட்சி ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த சிவஞானம் வழக்கு தொடர்ந்து போது, அதனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மேலும் 13 சென்ட் இடத்தில் உள்ள மதில் சுவரை இடித்து கையகப்படுத்த வேண்டும் . ஆக்கிரமிப்பாளர் கையகப்படுத்தி வைத்துள்ள மீதமுள்ள 37 சென்ட் இடத்தையும் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக, கோவை மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மதித்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, பூங்கா நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications