உணவுக்கு பில்.. திமுகவை சீண்டிய தேஜஸ்வி சூர்யா.. ஹோட்டல் அளித்த அடடே விளக்கம்.. பாஜக கப்சிப்

Subscribe to Oneindia Tamil

கோவை: உணவகத்தில் பில் வாங்க தயங்கியது குறித்து திமுகவைச் சீண்டும் வகையில் பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு, உணவகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் காலை கோவையின் பிரபல அன்னப்பூர்ணா உணவகத்தில் காலை உணவை எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, திமுகவைச் சீண்டும் வகையில் ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார்.

தேஜஸ்வி சூர்யா

தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில், இன்று காலை ஒரு உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டேன். பின் வழக்கம்போல பணம் செலுத்தச் சென்றேன். ஆனால், அங்கிருந்த கேஷியர் என்னிடம் பணம் வாங்க தயக்கம் காட்டினார். நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்தே நீண்ட தயக்கத்துடன் அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

நாங்கள் பாஜக

நாங்கள் பாஜக

நான் அப்போது அவரிடம் சொன்னேன், நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் மதிப்போம். சிறு வணிகர்களுக்குக் கூட துன்பத்தை ஏற்படுத்தும் திமுகவைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் " எனப் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் உடனடியாக இணையத்தில் வைரலானது. பாஜக ஆதரவாளர்களும் பலரும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாகவும் திமுகவை விமர்சித்தும் ட்வீட்களை பதிவிட்டனர்.

உணவகம் விளக்கம்

உணவகம் விளக்கம்

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அன்னப்பூர்ணா உணவகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அன்னப்பூர்ணா உணவகம் அதன் பேஸ்புக் பக்கத்தில்,நீங்கள் எங்கள் உணவகத்திற்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு நாங்கள் அனைவரையும் ஒரே விதமான அன்பு மற்றும் நன்றியோடு அணுகுகிறோம். எங்கள் கடையில் சாப்பிடும் அனைவரும் பில்லுக்கு பணம் கொடுக்கவே விரும்புகின்றனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

உணவை இலவசமாக வழங்க வேண்டும் என யாரும் எங்களை வற்புறுத்துவதில்லை. சமூகத்திற்காக உழைப்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாங்கள் சில நேரங்களில் பணம் பெறு மறுத்துவிடுவோம்" என்று தெரிவித்துள்ளது. இப்போது இந்த பதிவை வைத்து, திமுக ஆதரவாளர்கள் உணவிலும்கூட அரசியல் செய்வதாகத் தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பாஜக தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+