Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யாரையும் சும்மா விட கூடாது".. தற்கொலை செய்த கோவை மாணவி கடிதம்.. "பச்சமண்ணு அவ".. கதறி அழும் தாய்

பள்ளி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை பறிமுதல் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: "யாரையும் சும்மா விடக்கூடாது" என்று 12-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

Recommended Video

    Coimbatore School Girl தற்கொலை ஏன்? | Chinmaya Vidyalaya | Oneindia Tamil

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்...

     வழக்கு

    வழக்கு

    அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்திருக்கிறார்..

    பெற்றோர்

    பெற்றோர்

    இதுகுறித்து வீட்டிலும் மாணவி ஏற்கனவே சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனாலேயே மனமுடைந்து மாணவி தற்கொலை செய்திருப்பதாகவும் உறவினர்களும் பெற்றோர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    விசாரணை

    விசாரணை

    இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அதில் "யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது" என்று கைப்பட எழுதியுள்ளார்.. தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்.. தங்கள் மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

     அம்மா

    அம்மா

    இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் அம்மா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "6 மாசமா என் பிள்ளைக்கு டார்ச்சர் இருந்திருக்கு.. இந்த விஷயத்தை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.. பஸ்ஸில் போகும்போது 2 பேர் இடிச்சிடறது இல்லையா.. அந்த மாதிரி இந்த விஷயத்தை பெரிசு பண்ணிக்காம விட்டுடுங்கன்னு அந்த பிரின்சிபல் சொன்னாங்க.. எதுக்கு கவுன்சிலிங் கூட்டிட்டு போனாங்க.. அதை எதுக்கு வீட்டில் சொல்ல வேணாம்னு சொன்னாங்க.. பச்சை மண்ணு என் பிள்ளை..

     என்ன காரணம்?

    என்ன காரணம்?

    ஸ்கூல் பிடிக்கலன்னு மட்டும் சொன்னாள்.. காரணமே சொல்லல.. இப்பதான் அவ பிரண்டுங்க எல்லாம் சொல்றாங்க.. என் பிள்ளை மனசுக்குள்ளேயே போட்டு தவிச்சிக்கிறா.. அப்பப்ப என் பிள்ளை அழுவா.. என்னன்னு கேட்டால் ஒன்னுமில்லை..ம்மான்னு மட்டும் சொல்வாள்.. இப்படி என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே" என்று கதறி அழுகிறார்.

     ஆபாசம்

    ஆபாசம்

    அதேபோல மாணவியின் நண்பர் இதை பற்றி சொல்லும்போது, "நான் அவளுடைய க்ளாஸ் பிரண்ட்.. சின்மயா வித்யாலயா ஸ்கூலில் அவள் படிச்சிட்டு இருந்தாள்.. அங்க ஒரு சார் ஃபிரண்ட் ஆனார்.. எல்லாரையும் போலவே கிளாஸ் எடுத்துட்டு இருந்தார்.. நாள் ஆக ஆக போன் செய்து, அப்படியே இவளுடன் நட்பாகவும் பழக ஆரம்பித்துவிட்டார். ஒருமுறை, இவளுடைய அப்பா ஸ்கூலுக்கு வருவதற்கு லேட்டாகிவிட்டதால், இந்த சார்தான் பைக்கில் கொண்டு போய் அவளை வீடு வரை விட்டுவிட்டு வந்தார்.

     கண்ணீர்

    கண்ணீர்

    போன ஏப்ரல் மாதம், ஒருநாள் அந்த சார், இவளை தனியாக ஸ்கூலுக்கு சீக்கிரமா வர சொல்லி உள்ளார்.. சார் வர சொன்னதால் இவளும் சென்றிருக்கிறாள்.. பிறகு ஸ்கூலின் மாடி பகுதியில் உள்ள ஆடிட்டோரியத்துக்கு வர சொல்லி உள்ளார்.. அங்கே போனதும், அவள் அணிந்திருந்த மேலாடையை நீக்க சொல்லிவிட்டு தவறாக நடந்து கொண்டுள்ளார்.. ஆனால் இவள் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவே இல்லை.. இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கழித்து என்கிட்ட மட்டும் சொன்னாள்.. உடனே பள்ளி நிர்வாகத்திடம் சொல்லிவிட்டோம்..

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    ஆனால், பள்ளியின் பிரின்சிபல், நீ ஏன் அவருடன் பைக்கில் போனே? உன் மேலயும் தப்பு இருக்கு..அதனால வெளியே சொல்ல வேணாம் என்று சொல்லிவிட்டனர்.. அதுக்கப்புறம் அதே ஸ்கூலில் அவளால் படிக்கவும் முடியவில்லை.. அதில் இருந்து வெளியே வரவும் முடியவில்லை.. அப்போதிருந்தே அவள் அழுது கொண்டே இருந்தாள்" என்று அந்த மாணவன் கதறி அழுகிறார். மாணவனின் இந்த பேட்டியும், பெற்ற தாயின் கதறலும், உயிரிழந்த மாணவியின் கடைசி கடிதமும் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+