இனிதான் மெயின் பிச்சர்.. கோவை செம்மொழி பூங்காவில் அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் சர்ப்ரைஸ்
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதைக் காண்பதற்கு மக்கள் அதிகளவு செல்கிறார்கள். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பதால் அங்கு மேலும் பல வசதிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் விரைவில் அங்கு கண்ணாடி மாளிகை மற்றும் தியேட்டர் அமைக்கப்படவுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோதே திமுக கூறியிருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

கோவை செம்மொழி பூங்கா
அதன்படி கோவை மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்ததால் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி செம்மொழி பூங்காவை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது தன் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் செம்மொழி பூங்காவில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து பூங்காவை பார்வையிட மக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அடுத்தடுத்து புதுவரவுகள்
கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளாக மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. ஞாயிற்றுக்கிமைகளில் சராசரியாக 27,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நிலவி வருகிறது. பார்க்கிங் நிரம்புவதால் காந்திபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி சென்றனர்.
கோவை மத்திய சிறை வளாகம் பிளிச்சி பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு செம்மொழி பூங்கா விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பூங்காவில் இப்போதும் சில பணிகள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருப்பதை போல குளிர்ந்த தட்பவெப்பத்தில் தாவரங்களை வளர்க்க ஒரு கண்ணாடி மாளிகை கட்டப்பட்டு வருகிறது.
கண்ணாடி மாளிகை, தியேட்டர்
இதற்காக கோவை எம்பி ராஜ்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல டிக்கெட் விநியோகம் செய்யும் இடத்தில் ஒரு தியேட்டர் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் ஒரு அருங்காட்சியகம், ஏஐ தொழில்நுட்பத்தில் விளையாடுகள், அறிவியல் ஆய்வகங்கள், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வரப்படவுள்ளன. என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தகவல்களால் கோவை மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications