கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
கோயம்புத்தூர்: கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை ரவுடி கும்பல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியினரை அதிர்ச்சியை உறைய வைத்துள்ளது.
தொழில் நகரமான கோயம்புத்தூரில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கும் செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில், இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மலுமிச்சம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் தனித்தனி அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டு, லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் மோதல் சம்பவங்களும் இப்பகுதியில் தலைதூக்கி உள்ளன.
இந்தச் சூழலில், நேற்று அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை, ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் ஒருவர் முந்திக் கொண்டு சென்று உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ரவுடி கும்பல் ஆத்திரம் அடைந்து, இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை ஆபாசமாகப் பேசித் தாக்கி உள்ளனர்.
வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) இந்தக் கொடூரத் தாக்குதல் காட்சிகள் பதிவாகி உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அத்துமீறிச் செயல்படுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த சி.சி.டி.வி ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற சமூக விரோதச் செயல்களால் தாங்கள் நிம்மதியாக வசிக்கும் சூழல் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
"உடனடியாகக் காவல்துறையினர் இத்தகைய கும்பலைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்" என்பதே ஒட்டுமொத்தப் பகுதியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications