கோவை காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கும் கொடூரன்! வீடியோவில் அலறும் குழந்தை!
கோவை: கோவையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஒரு நபர், சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் வலியால் துடித்த போதிலும் அடிப்பதை நிறுத்தாமல் தொடர்கிறார் அந்த கொடூரன். அந்த வீடியோவில் குழந்தை அலறுவதை கேட்டாலே மனம் பதைபதைக்கிறது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. சென்னைக்கு அடுத்து தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற மாவட்டம் என்றால் அது கோவைதான்.

இங்கு பல லட்சக் கணக்கான மக்கள், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் தங்கி தொழில் கூடங்களில் பணியாற்றி வருகிறார்கள். தொழில் துறைகள் ஒருபுறம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு மோசடிகளும் நாளுக்கு, நாள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் பதிவு செய்து, குழந்தைகளுக்கு உணவு, உடைகள் அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்டம் முழுவதும், தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று நன்கொடைகள் என்ற பெயரில் வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் உள்ளது.
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற சுமார் 26 குழந்தைகளை பராமரிப்பதாக கூறப்படுகிறது. அங்கு குழந்தை ஒன்றை அங்கு உள்ள நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவனை அந்த கொடூரன் எதற்காக தாக்குகிறார் என தெரியவில்லை. தாக்கிவிட்டு ஏதோ மிரட்டலும் விடுக்கிறார். அந்த சிறுவனுக்கு பக்கத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவன் பயந்தபடியே அவர் அடிப்பதை பார்க்கிறான்.

இந்த தாக்குதல் விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாய், தந்தையரை இழந்து ஆதரவற்ற தவிக்கும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பயனு உள்ளதாக அமையும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. மேலும் மற்ற குழந்தைகளையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த காப்பகத்தின் வங்கிக் கணக்கை சரி பார்த்து உண்மையில் அந்த காப்பகத்திற்கு வரும் பணம், முறையாக அந்த குழந்தைகளுக்கு செலவிடப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதே போல் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 3 ஊழியர்களை கடந்த ஜனவரி மாதம் போலீஸார் கைது செய்தனர். இந்த காப்பகத்தில் 30 பேர் மனம் பாதிக்கப்பட்டவர்கள் மீதமும் 90 பேர் சிறுவர்கள். இவர்களை அடித்ததாக 3 பேரை கைது செய்த போலீஸார் மற்ற குழந்தைகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications