கேட்டை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள்.. அதுவிடுங்க, விஜய் 2 சர்ப்ரைஸ்.. கோவையே பிஸியாயிருச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை: விஜய் அரசியல் களம் காண போகிறார்.. பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர். இதில், 5 மண்டலங்களாக பிரித்து, மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும் நாளையும் கோவையில் நடக்கிறது. இன்றைய தினம் கோவையே தவெக தொண்டர்களால் ஸ்தம்பித்தது.

பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல்,

TCK Coimbatore Vijay

தவெகா சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் 2 நாட்கள் நடக்க உள்ளது.. குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று, நாளை என 2 நாள் மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது..

இன்றைய தினம், தவெக-வின் 10 மாவட்டங்களை சேர்ந்த அதாவது மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர்.. அதாவது, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கிறுள்ளனர். நாளை 13 மாவட்டங்களை சேர்ந்த பூத் ஏஜெண்ட்டுகளும் பங்கேற்கவுள்ளனர்.

மேற்கு மண்டலம் - பூத் கமிட்டி

இந்த கருத்தரங்கில், சில முக்கிய விஷயங்கள் பேச உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகளை மேற்கொள்வது, தேர்தல் கூட்டணி உட்பட கட்சி தொடர்பாக செய்ய வேண்டியவை என்ன? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேச உள்ளதாக தெரிகிறது.

அதேபோல, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலை சந்திப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிகிறது. மிக முக்கிய கருத்தரங்கமாக உள்ளதால், இந்த நிகழ்வுக்கு கட்சி தலைவர் விஜய் நேரடியாகவே கிளம்பி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு என்பதாலும், விஜய் பங்கேற்றுள்ளதாலும், மற்ற அரசியல் கட்சிகளிடம் இந்த கருத்தரங்கு ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

டிராபிக் ஜாம்

விஜய்யின் வருகை திட்டமிடப்பட்டது என்றாலும், அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..

வார இறுதி நாட்கள் என்பதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், வழக்கத்தைவிட அதிகமான டிராபிக் ஜாம் ஏற்பட்டது. மாலையில் கருத்தரங்கு என்றாலும், காலையிலிருந்தே டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாற்று வழியை உபயோகப்படுத்தும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சர்ப்ரைஸ் தந்த விஜய்

சென்னையிலிருந்து கோவைக்கு ஃபிளைட் மூலம் வந்த விஜய்க்கு, ஏர்போர்ட்டிலேயே ஏராளமானோர் உற்சாக வரவேற்பை தருவதற்காக திரண்டிருந்தனர்.. அப்போது தொண்டர்கள் சிலர், கட்சிக்கொடியை விஜயை நோக்கி வீச ஆரம்பித்துவிட்டனர்.

எனினும், அந்த கட்சிக்கொடிகளை அதே உற்சாகத்துடன் விஜய் பெற்றுக் கொண்டு, அவைகளை தன்னுடைய கழுத்திலும் அணிந்து கொண்டு, அவர்களை நோக்கி கையசைத்தார்.. இதை பார்த்ததுமே தொண்டர்கள் கைகளை தட்டி, ஆரவாரம் செய்தார்கள். பிறகு, ஜீப்பில் ஏறி விஜய் என்று செல்லக்கூடும் என்று நினைத்திருந்தால், திறந்த வேனில் ஏறி நின்று, வழியெங்கும் நின்ற தொண்டர்களை பார்த்து கையசைத்து, சர்ப்ரைஸ் தந்துவிட்டார்.

ஆர்ப்பரித்த கூட்டம்

ஆனால், தவெக தொண்டர்களால் இந்த முறையும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. ஏர்போர்ட்டில் விஜய்யை வரவேற்க கூடியிருந்த தொண்டர்களும், ரசிகர்களும், ஓடியாடிக்கொண்டே அலைமோதியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இத்தனைக்கும் ஸ்பீக்கர் மூலம் தொண்டர்களை புஸ்ஸி ஆனந்த் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். ஆனாலும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அடக்க முடியவில்லை.. ஒரு சில ரசிகர்கள் விஜயின் வாகனத்தில் ஏற முயன்றதால் அதற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.

கேட்டை உடைத்து வந்த கூட்டம்

விமான நிலையத்தில் இப்படியென்றால், கருத்தரங்கு நடைபெறும் இடங்களிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. ஒன்றரை மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி துவங்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

கருத்தரங்கில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக கூட்டம் கூடியிருக்கிறதாம். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் கருத்தரங்கில் உட்கார வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் மேற்பட்டவர்கள், கல்லூரி வாயிலில் குவிந்துவிட்டார்கள்.. கல்லூரிக்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்து, விஜய் விஜய் என்று கத்திக்கொண்டே காலேஜுக்குள் தவெக தொண்டர்கள் அதிவேகத்தில் பாய்ந்து வந்தனர்.

காவல்துறை, பவுன்சர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் சேர்ந்து தடுத்த போதும், ரசிகர்களை கட்டுப்படுத்தியும் முடியவில்லை.. பிறகு ஒருவழியாக வாயிற்கதவை நிர்வாகம் இழுத்து மூடிவிட்டதையடுத்து, தொண்டர்களால் உள்ளே வர முடியவில்லை. இதனால் ஏராளமானோர் அதிருப்திக்கு ஆளானார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+