அடடா அசத்தலான வேகம்.. கோயம்புத்தூரின் அடையாளத்தையே மாற்றும்.. ஒரு திட்டம்.. 90% ஓவர் ஆகிடுச்சே!
கோயம்புத்தூர்: கோவையில் பிரம்மாண்ட செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திட்டப் பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய 10% பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் நான்கு மாதங்களில் இந்த வேகமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.

கோவை செம்மொழிப் பூங்கா: சிறப்பம்சங்கள்
டாக்டர் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிறை மைதானத்தில் இந்தப் பூங்கா கட்டம் வாரியாக உருவாக்கப்படுகிறது. முதற்கட்டமாக, கோவை மத்திய சிறைச்சாலையின் பயன்பாட்டில் இல்லாத 45 ஏக்கர் நிலத்தில், 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் கடந்த ஜூன் 28ஆம் தேதி திறக்கப்பட்டு, பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது.
பூங்காவில் மல்டி லெவல் கார் பார்க்கிங், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சேமிப்பு வசதிகள், அனுபவ மையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பூங்கா சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த பூங்கா வர உள்ளது. கோவையின் புதிய அடையாளமாக இந்த பூங்கா உருவெடுக்கலாம்.
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா
சென்னையில் அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா, முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 2010ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பூங்கா, தற்போது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்பு தனியார் ஹோட்டல் இருந்த இடத்தில், அரசு நிலத்தை கையகப்படுத்தி இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
தீவிரமாக நடைபெறும் பணிகள்
கோவையில் அமையவுள்ள செம்மொழிப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதற்குள் வேகமாக பணிகள் நடந்து.. கோவையில் பிரம்மாண்ட செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திட்டப் பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய 10% பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் நான்கு மாதங்களில் இந்த வேகமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையின் உதவியுடன் மூலிகை தோட்டங்கள், சிற்பங்கள், மரபணு ஆராய்ச்சி, பாரம்பரிய மரங்கள் மற்றும் இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படும் 'இசைத் தோட்டம்' போன்ற பல்வேறு அம்சங்கள் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன.
மாநகராட்சியின் தகவல்படி, காந்திபுரம் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவுதல், சிற்பங்கள் அமைத்தல் மற்றும் சிறிய மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ₹93.448 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், உக்கடத்தில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூங்காவிற்கு குழாய் அமைக்கும் பணிக்கு ₹7.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,000 சதுர அடியில், மாற்றி அமைக்கும் வசதியுடைய இருக்கைகளுடன் கூடிய பல்நோக்கு மாநாட்டு மையம் ₹25.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து, நகரின் முக்கிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications