கோயம்புத்தூருக்கு சர்ப்ரைஸ்.. கோவை டூ சென்னை வந்தே பாரத் ரயிலில் குட்நியூஸ்! பல நாள் ஆசை நிறைவேறுது
கோவை: ரயில்களின் தேவை பயணிகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அதிலும் வந்தே பாரத் போன்ற ரயில்களின் வருகையானது, ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நாளுக்கு நாள் புது புது வசதிகளுடன், புது புது சலுகைகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவை டூ சென்னை பயணிகள் முன்வைத்து வரும் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படுமா? என்ற ஆர்வம் எழுந்து வருகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள், கடந்த 2019ல் ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது.

ரயிலில் வசதிகள்
வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும்... ஆட்டோமேடிக் கதவுகள், AC, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் போன்று எண்ணற்ற நவீன வசதிகள் உள்ளன. குறுகிய நேரத்தில் எளிதான பயணத்தை மேற்கொள்ளவும் முடிகிறது.
அந்தவகையில், தென்னிந்திய மாநிலங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முன்பதிவும், வரவேற்பும் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் 20643 / 20644 என்ற எண் கொண்ட சென்னை சென்ட்ரல் டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும்.
கோவை டூ சென்னை வந்தே பாரத்
இந்த ரயில் கிட்டத்தடட் 495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சென்னை சென்ட்ரல் டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.. ரயிலில் மொத்தம், 598 இடங்கள் உள்ளன. இருமார்க்கங்களிலும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக இது இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 7 பெட்டிகள் AC சேர் கார் ஆகவும், 1 பெட்டி எக்ஸிக்யூடிவ் ஏசி சேர் கார் ஆகவும் உள்ளது. எக்ஸிகியூட்டிவ் கட்டணம் பயணி ஒருவருக்கு, 2,310 ரூபாய், AC சேர் கார் கட்டணம், 1,215 ரூபாயாக உள்ளது.
சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தினசரி காலை 6 காலை மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 11:50க்கு சென்னை சென்றடையும். அதேபோல மதியம் 2:15க்கு சென்னையில் புறப்பட்டு, இரவு 8:15க்கு கோவை வந்தடைகிறது.
16 பெட்டிகள் - சர்ப்ரைஸ் வருமா
அந்தவகையில் வெறும் 6 மணி நேரத்தில் பயண நேரம் உள்ளது. மேலும், இந்த ரயில், சேலம் - சென்னை இடையே எந்த ஸ்டேஷனிலும் நிற்பதில்லை. இதனால் பயணிகளின் ஆதரவு இந்த ரயிலுக்கு அதிகரித்தபடியே உள்ளது.
எனவேதான், வெறும் 8 பெட்டிகளுடன் இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலை, 16 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.. ரயில் டிக்கெட் முன்பதிவும் அதிகரித்து விட்டது.. எனவே பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டாவது, 16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்..
விரைவில் குட்நியூஸ்
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, ரயில் டிக்கெட் முன்பதிவு, வருவாய், பயணியர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.
கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிடும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த சர்ப்ரைஸ் தகவலானது, பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
குட்டி பெங்களூராக மாறி வரும் கோயம்புத்தூர்.. ஒரே நேரத்தில் 41 ஐடி பார்க்.. இதெல்லாம் வேறலெவல் சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications