கோவை அர்ச்சகர் ரொம்ப அசிங்கமா சிக்கிட்டாரு.. அதுவும் வடவள்ளி கோயிலுக்குள்ளயே.. கலங்குது கோயம்புத்தூர்
கோவை: யாரிந்த அர்ச்சகர்? கோவை மாவட்ட பக்தர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்? இவரிடம் வடவள்ளி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்களாம். என்ன காரணம்?
கோவை வடவள்ளி அருகே உள்ளது மருதமலை முருகன் கோயில்.. இந்த கோயிலுக்கென நிறைய உபகோயில்களும் உள்ளன. அதில் முக்கியமானது வடவள்ளி அருகே உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகும்.

குண்டுமணி: சமீபத்தில், இந்த கோயிலில், அறங்காவலர் குழு தரப்பினர் நகைகளை பரிசோதனை செய்தனர்.. அப்போது, சுவாமியின் குண்டுமணிகள் வித்தியாமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார்கள்.. அதற்கு பிறகுதான் தெரிந்தது, 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அனுவிக்கப்படும் தங்க தாலியும், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்திருக்கிறது.
பிறகு அவைகளை சோதனையிட்டதில், குண்டுமணிகளும், தாலியும் போலியாக தயாரித்து சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.. இதையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் ஹர்ஷினி, வடவள்ளி போலீசில் புகார் தந்தார்..
கோயில் அர்ச்சகர்: இது தொடர்பான விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதில், அதே கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீவத்சாங்கன் என்பவர் சிக்கினார்.. இவர் இந்த கோயிலில் தினக்கூலி அடிப்படையில் அர்ச்சகராக வேலை பார்த்து வருபவராம்.. 40 வயதாகிறது.. இவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.. சுவாமியின் நகைகளை திருடியதை ஸ்ரீவத்சாங்கன் ஒப்புக் கொண்டார்..
அந்த நகைகளை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்றுவிட்டாராம்.. இதனால் போலீசார், சம்பந்தப்பட்ட அந்த நகைக்கடைக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்ட 14 கிராம் தங்க நகைகளையும் மீட்டனர். இறுதியில், ஸ்ரீவத்சாங்கனை கைது செய்து, ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.
திருட்டு கேஸ்: இது தொடர்பாக ஸ்ரீவத்சாங்கனிடம் விசாரணை நடத்தும்போதுதான், இவர் ஏற்கனவே பல இடங்களில் கைவரிசையை காட்டியவராம்.. அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம்கூட, எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இவர்மீது திருட்டு கேஸ் பதிவாகியிருக்கிறது.. புதுப்பேட்டையில் உள்ள கோதண்டராமர் கோயிலிலும், 8 கிராம் தங்கம், 7 கிலோ வெள்ளியை சுருட்டிவிட்டார் இந்த அர்ச்சகர்.. இந்த திருட்டிலும் கையும் களவுமாக சிக்கி, மொத்தம் 60 நாட்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்திருக்கிறார்..
ஜெயிலிலிருந்து வெளியே வந்ததுமே, கோவைக்கு விஜயம் செய்துள்ளார்.. கோவையிலேயே தங்கி, இந்த கோயிலில் தினக்கூலி அடிப்படையில் வேலையும் சேர்ந்து, இப்போது வேலையை காட்டியிருக்கிறார்.
மனமாற்றங்கள்: இதில் ஹைலைட் என்னவென்றால், அறங்காவலர் குழுவினர் நகைகளை பரிசோதனை செய்ய கோவிலுக்குள் நுழைந்து நகைகளை செய்ய முயன்றபோது, இந்த ஸ்ரீ வாத்சாங்கன்தான் நகைகளை கொண்டுவந்து தந்தாராம்.
அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடையுள்ள 7 பொன்தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் போன்றவற்றையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துள்ளார்... அப்போதுகூட, ஸ்ரீவாத்சாங்கன்மீது சந்தேகம் எழுந்ததாம்.. அதற்குபிறகுதான், நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலியானது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
சிறைவாசம் என்பதே, சிறைவாசிகளின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தும் என்று சொல்வார்கள்.. ஆனால், ஸ்ரீவத்சாங்கனோ, சூட்டோடு சூட்டாக இன்னொரு திருட்டிலும் கைதாகி உள்ளே போயிருக்கிறார்..!!
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications