Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டத்தை கைவிட்ட அரசு.. பின்னணி என்ன?

கோவை வெள்ளலூரில் அமையவிருந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் கைவிடப்பட்டது. இதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை வெள்ளலூரில் அமையவிருந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, உள்கட்டமைப்பை வேறு சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நகரப் பொறியாளர் பதிலளித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த ரேஸ் கோர்ஸ் ரகுநாத் அளித்த மனுவிற்கு இந்த பதிலை கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையைப் போல் கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று ஒன்று இல்லை. திருச்சியைச் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தென்மாவட்ட பேருந்துகள் சிங்காநல்லூரிலும், ஈரோடு, சென்னை, சேலம் உள்ளிட்ட பேருந்துகள் காந்திபுரத்திலும் நிறுத்தப்படுகின்றன. இதை போல் கோவையில் உக்கடமும் முக்கியமான பேருந்து நிலையமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையைப் போல் கோவையிலும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. கோவை வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அப்போது முடிவு செய்தது. பணிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சியும் தமிழக அரசும் 50:50 என்கிற கணக்கில் செலவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து எஸ்பி வேலுமணி 2020 ஜனவரி மாதம் 24ம் தேதி பணிகளை தொடங்கி வைத்தார்.

குப்பை கிடங்கு

குப்பை கிடங்கு

இதற்கு அப்போதே திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், திமுக முன்னாள் எம்எல்ஏ ந.கார்த்திக் கூறும் போது, வெள்ளலூர் என்பது கோவையின் பிரதான பகுதியான காந்திபுரத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இதனால் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைந்தால் பயண நேரம் அதிகமாகும். மேலும் வெள்ளலூருக்குச் செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை என்றும், இதனால் வெள்ளலூரில் பேருந்து நிலையத்தை அமைப்பது சாத்தியப்படாது என்றும் பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்திற்கு பின்புறமே வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படலாம் என்றும் கூறியிருந்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இவரது கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், முதல்வர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமான தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோவையின் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கி போட்டிருப்பதாகவும். அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப் பணத்தை வீணடித்து வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றத் துடிப்பதாக குற்றம்சாட்டினார்.

குப்பை கிடங்கு

குப்பை கிடங்கு

இதனிடையே தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் ஆலோசகர் சமர்ப்பித்த அறிக்கையில், அந்த இடத்திற்கு போதுமான அணுகுமுறை சாலைகள் இல்லை என்றும், அருகிலுள்ள குப்பை கிடங்கில் இருந்து சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கே.கதிர்மதியோன் தெரிவித்தார்.

முன்னேற்றம் இல்லை

முன்னேற்றம் இல்லை

முன்னதாக பேருந்து நிலைய கட்டுமானத்தை அமைக்க கடன் வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக அரசு தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தை அணுகியது. தற்போதைய நிலவரப்படி, எந்த நிதியுதவியும் இன்றி மாநகராட்சி ரூ.40 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. அதாவது 40 சதவீத பணிகள் நடந்திருக்கிறது. ஆனால் கொரோனா பிரச்சனைக்கு காரணமாக கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதிமுகவினர் நிலம்

அதிமுகவினர் நிலம்

அதிமுக மாநகராட்சி உறுப்பினர் பிரபாகரன் கடந்த ஆண்டு மாநகராட்சி கூட்டத்தில் இதுபற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், மத்திய அரசின் ரைட்ஸ் (RITES) என்கிற ஆய்வு நிறுவனம் வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்றார். இந்நிலையில் செப்டம்பர் 5, 2022 அன்று முதலமைச்சரிடமும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திலும் திமுகவைச் சேர்ந்த .ரகுநாத் அளித்த புகாரில், வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகவும், பேருந்து நிலையத்திற்கு அருகில் அதிமுகவினர் நிலம் வாங்கி குவித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மாநகராட்சி பதில்

மாநகராட்சி பதில்

இதனிடையே திமுக பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ராகுநாத் அளித்த புகாருக்கு பிப்ரவரி 7, 2023 அன்று பதில் அளித்த நகரப் பொறியாளர், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்காக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வேறு சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்திட்டம் குறித்து மாநகராட்சியிடம இருந்து எழுத்துப்பூர்வமாக தரப்பட்ட முதல் பதில் இதுதான்.

 கோயம்பேடு போல்

கோயம்பேடு போல்

சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கே.கதிர்மதியோன் இதுபற்றி கூறுகையில், திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால், வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறம்பட பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட வேண்டும் என்றார். சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு இணையான மொத்த விற்பனை சந்தை அல்லது ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+