விடிகாலையிலேயே பிஸியான கோவை.. "ஸ்டிரிக்ட் ஆர்டர்".. இன்று முதல் தளர்வுகள் ஆரம்பம்.. தீவிரம்..!
கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாகி உள்ளன
கோவை: இன்று முதல் கோவையில் பால், மெடிக்கல் ஷாப்கள், காய்கறி கடைகளை தவிர மற்ற எல்லா கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவையில் தொற்று அதிகமாக இருந்தது.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் 2,3 முறை கோவைக்கு வந்து சென்று ஆய்வு நடத்தினார்.. பிறகு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மெல்ல குறைய ஆரம்பித்தது.
ஆனாலும், மற்ற மாவட்டங்களுக்கு நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை உட்பட 11 மாவட்டங்களில் தளர்வுகள் அவ்வளவாக வெளியாகவில்லை.. இந்நிலையில், மறுபடியும் கோவையில் கடந்த வாரம் முதல் தொற்று பரவல் மெல்ல உயர ஆரம்பித்தது.. 140-க்கும் கீழே சென்ற பாதிப்பு திடீரென 160, 170 என உயர்ந்து 240-யை தொட்டது.

கடைகள்
இதனால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது... அதன்படி இன்று முதல் கோவையில் பால், மெடிக்கல் ஷாப்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளை தவிர மற்ற எல்லா கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது..

இன்றுமுதல் ஆரம்பம்
அந்த வகையில் விடிகாலையிலேயே பால், மெடிக்கல்ஷாப் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன... மற்ற கடைகள் 10 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.. அதற்குபிறகு மூடப்பட்டுவிடும்.. மார்க்கெட்டுகளில் கூட சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டு, மொத்த விற்பனை மட்டுமே நடந்தது.. ஆனால், மார்க்கெட்டுகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கேரளா
கோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், பக்கத்து மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும்.. அல்லது 2 தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்... இதனால் கோவையில் போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் உள்பட பல்வேறு துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம்
கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் தினமும் பல்வேறு காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதால், அந்த வாகனங்களுக்கும் எல்லையில் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.. இதேபோன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications