பொள்ளாச்சி அரசு பள்ளி படிக்கட்டு அடியில் காத்திருந்த எமன்: கோவை மாணவர்கள் ஒரே ஓட்டம் - நடந்தது என்ன?
கோவை,: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை அரங்கேறிய ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதெல்லாம் அரசு பள்ளியில் அரங்கேறி வரும் சம்பவங்களை நினைத்தால் பெற்றோர்களின் இதயமே பதறி போய்விடுகிறது..
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்த வேளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொள்ளாச்சி அரசு பள்ளிகள்
பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை முதலே நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்து ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
அப்போது, வகுப்பறைக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு அடியில் மறைந்திருந்த சுமார் 5 அடி நீளமுள்ள ராட்சத நாகப்பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்தது.
பள்ளி வளாகம்
இதைக் கண்ட மாணவர்கள் நிலைகுலைந்து போனார்கள். யாரும் எதிர்பாராத நேரத்தில் சீறி வந்த பாம்பை பார்த்த மாணவர்கள், உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். தேர்வு நேரத்தில் இந்த சம்பவம் பள்ளி வளாகத்தையே போர்க்களமாக மாற்றி விட்டத.. .
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சுதாரித்துக் கொண்டு மாணவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர், இது குறித்து வனத்துறைக்கும் பாம்பு பிடி வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை படிக்கட்டு எமன்
தகவலின் பேரில் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் சுரேஷ், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, படிக்கட்டுகளுக்கு அடியில் பதுங்கியிருந்த அந்த நச்சுப் பாம்பை லாவகமாக பிடித்தார். மீட்கப்பட்ட நாகப்பாம்பு பின்னர் ஆழியார் அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் தேர்வு எழுத வந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.
பாம்பு கடித்தால் என்ன செய்வது
எப்போதுமே பாம்பு கடித்தால் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு முறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு கடித்துவிட்டால், முதலில் பதற்றமடையாமல் இருக்க வேண்டும். பதற்றம் அடைந்தால் இதயத் துடிப்பு அதிகரித்து, விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடும்.
கடித்த இடத்திற்கு மேல் கயிறு அல்லது துணியைக் கொண்டு மிக இறுக்கமாகக் கட்டக்கூடாது; இது ரத்த ஓட்டத்தைத் தடுத்து அந்தப் பகுதியைச் செயலிழக்கச் செய்துவிடும். மாறாக, கடித்த இடத்தை அசைக்காமல் வைத்துக்கொண்டு, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று'ஆன்டி வெனம் என்ற ஊசி செலுத்திக் கொள்வதே உயிரைக் காப்பாற்ற ஒரே வழியாகும்.
பச்சிலை மருந்து
அப்படி மருத்துவமனைக்கு செல்லும் முன்பு, கடித்த இடத்தை சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரில் கழுவலாம். வாயால் விஷத்தை உறிஞ்சி எடுக்க முயல்வது அல்லது பச்சிலை மருந்துகளை தேடுவது போன்ற செயல்களைத் தவிர்த்து, பொன்னான நேரத்தை வீணடிக்காமல் நவீன மருத்துவ சிகிச்சையை நாடுவதே சிறந்தது. பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புதர்கள் மண்டிக் கிடக்காமல் பார்த்துக் கொள்வதும், போதிய விழிப்புணர்வுடன் இருப்பதும் இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க உதவும் என்கிறார்கள் பாம்பு பிடி வீரர்கள்..!!
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications