தீபாவளிக்கு பதிலடி: மாட்டிறைச்சி, பன்றிறைச்சியுடன் கோவையில் நடந்த நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு!
கோவை: தீபாவளி பண்டிகைக்கு பதிலடியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசூரன் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் திராவிடர் விருந்து என்ற பெயரில் மாட்டிறைச்சி, பன்றிறைச்சி விருந்து வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. நரகாசூரன் அழிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பது பொதுநம்பிக்கை. இதனை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர்.

அதேநேரத்தில் தீபாவளி பண்டிகை தொடர்பான மாறுபட்ட கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. தீபாவளிக்கு எதிராக நீண்டகாலமாக திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து வருகிறது. இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தினர் தீபாவளிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திமுக தலைவர்கள் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகளை சொல்வது இல்லை. தீபாவளி பண்டிகை என்பது தேவர்கள் Vs அசுரர்கள் போராட்டம் என்கிறது; இது ஆரியர் vs திராவிடர் போராட்டம்; திராவிடர்களாகிய நம்மை நமது "திராவிடப் பேரரசன்" நரகாசூரன் அல்லது நரகாசுரன் வீழ்த்தப்பட்ட நாளை நாமே கொண்டாடுவது என்பது ஏற்புடையது அல்ல என்கிறது திராவிடர் இயக்கம்.

இதனால் தீபாவளி நாளில் "நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு" நிகழ்ச்சிகளை திராவிடர் இயக்கத்தினர், பெரியார் கொள்கையாளர்கள் நடத்துகின்றனர். கோவையில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கோவை பெரியார் படிப்பகத்தில் நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் திராவிடர் விருந்தாக மாட்டிறைச்சி, பன்றிறைச்சி உணவு விருந்து வழங்கப்பட்டது.

இதேபோல திராவிடர் தளம் "நரகாசுரன் வீரவணக்கநாள் - தீபாவளி புறக்கணிப்பு ஒன்றுகூடல் நிகழ்வு திருப்பூர் Casteless பால் பண்ணையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மாட்டுக்கறி, பன்றிக்கறியோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications