சபாஷ்.. கோவை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் கல்விச் செலவை ஏற்ற தனுஷ் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள் நிழல் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள, குழந்தைகளின் ஐந்து வருட கல்வி செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட தனுஷ் தலைமை மன்றம் சார்பாக இடையர்பாளையம் பகுதியில் உள்ள நிழல் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் 20திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஐந்து வருட கல்வி செலவை ஏற்றுள்ளனர்.

Dhanush fans will take care of 5 years expensive of children in Coimbatore home

இந்நிலையில், முதல் ஆண்டிற்கான, உதவி தொகையை வழங்கும் நிகழ்ச்சி, நிழல் இல்லத்தின் முன்பாக நடைபெற்றது. கோவை மாவட்ட தனுஷ் தலைமை மன்ற தலைவர் மணி,செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிழல் இல்லத்தின் நிர்வாகி சுதாவிடம் உதவி தொகை வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட நிர்வாகிகள், அந்தோணி, பழனி குமார், வினோத் குமார், ராஜ் குமார், வடக்கு நகர தலைவர் அருள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dhanush fans will take care of 5 years expensive of children in Coimbatore home

இது குறித்து நிர்வாகிகள் பேசுகையில், தனுஷ் பிறந்தநாளில் இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பிறந்தநாள் விழாவில் இது போன்ற பயனுள்ள உதவிகளை செய்ய மற்றவர்களும் முன் வரவேண்டும் என தெரிவித்தனர்.

Dhanush fans will take care of 5 years expensive of children in Coimbatore home

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், நவீன் குமார், மணிகண்டன், ராஜேஷ் கண்ணா உட்பட கணபதி, சரவணம்பட்டி, துடியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+