Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விட்ரு, கர்ப்பமா இருக்கேன்.. கதறிய ரேஷ்மா.. லாட்ஜுக்குள்ளேயே நுழைந்த போலீஸ்.. யாரந்த சுப்புலட்சுமி?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்துள்ளார்.. கடைசியில் விஷயம் அம்பலமாகி, கொலை, குத்து, ஜெயில்வரை விவகாரம் சென்றுவிட்டது.

கோவை அருகே உள்ளது இடையர் பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுப்புலட்சுமி.. 20 வயதாகிறது.. ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்..

Did the young man fall in love with 2 women and What happened to the young woman in Coimbatore

இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பிணமாக கிடந்தார்.. இவரை யாரோ குத்தி கொலை செய்திருந்தனர்.. இது குறித்து உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தரப்பட்டது.

அப்பார்ட்மென்ட்: போலீசாரும் சம்பந்தப்பட்ட அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான் அந்த அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும் சுஜய் என்பவரின் பெயர் அடிபட்டது.. இவருக்கு 27 வயதாகிறது.. திருமணமாகி விட்டது.. மனைவி பெயர் ரேஷ்மா.. அவர் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் சுப்புலட்சுமியை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது.. ஆனால், அந்த வீட்டில் தம்பதியை காணவில்லை.. இவர்களை தேடும் பணி ஆரம்பமானது.. இறுதியில் கேரள மாநிலம் கண்ணூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு சென்று தம்பதியை போலீசார் கைது செய்தனர். ரேஷ்மாவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டது.. அப்போது ரேஷ்மா போலீசில் சொன்னதாவது:

கேரளா பெண்: நான் கேரளாவை சேர்ந்தவள்.. கோவை இடையர்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனத்தில்தான் சுஜய்யை முதன்முதலாக பார்த்தேன்.. பிறகு இருவருமே காதலித்தோம்.. ஆனால், அடுத்து சில மாதங்களில் நான் குடும்ப சூழ்நிலை காரணமாக கேரளாவுக்கு செல்ல நேர்ந்தது.. அந்தசமயத்தில், சுஜய், கவுண்டம்பாளையத்தில் புது நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.. அந்த நிறுவனத்தில் கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி வேலைக்கு சேர்ந்தார்..

Did the young man fall in love with 2 women and What happened to the young woman in Coimbatore

லவ் டார்ச்சர்: ஒருநாள், அவரை யாரோ ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்து லவ் டார்ச்சர் தருவதாக சுஜய்யிடம் சொல்லி அழுதார்.. சுஜய்யும் அந்த இளைஞர் யார் என்பதை கண்டறிந்து, இனிமேல் சுப்புலட்சுமி பின்னால் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.. இதனால், சுப்புலட்சுமிக்கு என் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.. அதுவே காதலாக மாறியிருக்கிறது.. சுஜய்யும், சுப்புலட்சுமியுடன் பழகியிருக்கிறார்.. ஆனால், என்னை ஏற்கனவே காதலிப்பதை சுப்புலட்சுமியிடம் மறைத்துவிட்டார்.

கடந்த வருடம், சுஜய்யை நான் நேரில் சந்தித்து பேசினேன்.. அப்போது மறுபடியும் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.. கல்யாணமும் செய்துகொண்டோம்.. பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் அப்பார்ட்மென்ட்டில் வீடு எடுத்து தங்கினோம்.. நான் 8 மாத கர்ப்பமாக இப்போது உள்ளேன்... இதனிடையே, என்னுடைய கணவரை, எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசிவந்தார். இது தெரிந்ததுமே நான் அவரை கண்டித்தேன்... எங்களுக்குள் தகராறு வெடித்தது.. சுப்புலட்சுமிக்காக என்னிடம் இப்படி தகராறு செய்கிறாரே என்று பயந்துபோனேன்.. என்னை விட்டு, என் கணவர் பிரிந்து சென்று விடுவாரோ என்ற கலக்கம் வந்துவிட்டது.

கர்ப்பம் மனைவி: அதனால், சுப்புலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள், பேசி தீர்த்து கொள்ளலாம் என்று சொன்னேன்.. சம்பவத்தன்று சுப்புலட்சுமியை என்னுடைய கணவர், வீட்டிற்கு அழைத்து வந்தார்.. ஆனால், வீட்டில் இருந்த என்னை பார்த்ததுமே, சுப்புலட்சுமி அதிர்ச்சியடைந்தார். காரணம், என்னை சுஜய் திருமணம் செய்துகொண்டது, சுப்புலட்சுமிக்கு தெரியாது.. அப்போது நான் சுப்புலட்சுமியிடம், "எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. கர்ப்பமாக இருக்கிறேன்.. அதனால், என்னுடைய கணவரிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிடவேண்டும்" என்றேன்..

ஆனால், அதிர்ச்சியும், ஆத்திரமுடைந்த சுப்புலட்சுமி, என் கணவரை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் எனக்கும் சுப்புலட்சுமிக்குமிடையே, இடையே வாக்குவாதம் முற்றிப்போய், கைகலப்பாக மாறிவிட்டது.. நாங்கள் ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டோம். ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் வயிற்றில் குத்தினேன்.. இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

Did the young man fall in love with 2 women and What happened to the young woman in Coimbatore

7 மாத கர்ப்பிணி: உடனே என்னுடைய கணவர், சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் வெளியே வராமல் இருக்க இன்னொரு கத்தியை எடுத்து அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.. இதில் சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி துடிதுடித்து இறந்துவிட்டார்.. பிறகு நாங்கள் 2 பேரும் பைக்கிலேயே கேரளாவுக்கு தப்பி சென்றோம்.. கண்ணூர் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தோம். போலீசார் அங்கேயே வந்து எங்களை கைது செய்து விட்டனர்" என்றார்.. இப்போது, சுஜய்யும், 7 மாத கர்ப்பிணியான ரேஷ்மாவும் ஜெயிலில் உள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+