Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூ என்ட்ரி லீடருக்கு ‘அசைன்மென்ட்’.. வேலையை ஆரம்பிச்சிட்டாராம்.. கொத்துக் கொத்தா சிக்கப் போகுதாமே!

Subscribe to Oneindia Tamil

கோவை : சமீபத்தில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜுக்கு முக்கியமான அசைன்மெண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன்படி, கோவை செல்வராஜ், வலைவீசத் தொடங்கிவிட்டார், விரைவில் பெரிய சம்பவங்கள் நடக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

குறிப்பாக, அதிமுகவில் மகளிர் அணியினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி இருந்து வரும் நிலையில், மகளிர் அணியின் முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து தூண்டிலைப் போட்டிருக்கிறாராம் கோவை செல்வராஜ்.

சைலண்டாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில், சிலர் திமுகவுக்கு தாவ ரெடியாவார்கள் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.

கோவை ஸ்வீப்

கோவை ஸ்வீப்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் திமுக இழந்த நிலையில், கோவையில் திமுகவை பலப்படுத்தும் பொறுப்பை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கினார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜியும், தனது சொந்த மாவட்டமான கரூரில் இருப்பதை விட அதிக நாட்கள் கோவையிலேயே இருந்து வருகிறார். அப்படி பணியாற்றியதன் பலனாக, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியை ஸ்வீப் செய்து, ஸ்டாலினிடமும் பாராட்டுப் பெற்றார் செந்தில் பாலாஜி.

அடுத்தடுத்து வெற்றி

அடுத்தடுத்து வெற்றி

தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜி, முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி நாகராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமுக்கும் மிகவும் நெருக்கமான அதிமுக புள்ளியான செந்தில் கார்த்திகேயன் ஆகியோரை திமுகவிற்கு கொண்டு வந்துள்ளார்.

சிட்டிங் எம்.எல்.ஏக்கள்

சிட்டிங் எம்.எல்.ஏக்கள்

சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்கவும் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏவான அமுல் கந்தசாமி திமுகவில் இணையப் போகிறார் எனப் பேச்சுகள் அடிபட்ட நிலையில், அதற்கடுத்து எந்த மூவும் நடைபெறவில்லை. இந்நிலையில், வேலுமணிக்கு நெருக்கமான சில புள்ளிகளை குறிவைத்துள்ளதாம் செந்தில் பாலாஜி தரப்பு. இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் மூலம் அடுத்தகட்ட ஆபரேஷன்கள் நடந்து வருகிறதாம்.

சத்தமில்லாமல் பேச்சுவார்த்தை

சத்தமில்லாமல் பேச்சுவார்த்தை

சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் மூலமாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளில் அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை கண்டறிந்து திமுக பக்கம் இழுக்கும் முயற்சிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருகிறாராம். கடந்த தேர்தல்களில் அதிமுக தலைமையிடம் சீட் கேட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த சில புள்ளிகளிடம் சத்தமில்லாமல், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

மகளிர் அணிக்கு வலை

மகளிர் அணிக்கு வலை

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் மகளிர் அணிக்கு, பெரிய முக்கித்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறதாம். தற்போது இரு அணிகளாகப் பிரிந்துள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தங்கள் அணிகளில் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதை நன்கு உணர்ந்துள்ள கோவை செல்வராஜ், இரு அணிகளிலும் மகளிர் அணியில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளிடம் பேசி வருகிறாராம்.

சிறப்பான சம்பவம் நடக்கும்

சிறப்பான சம்பவம் நடக்கும்

அதிமுகவில் இனி மகளிர் அணியினருக்கு நல்ல வாய்ப்புகள் இல்லை, ஆளுங்கட்சியான திமுகவுக்கு வந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, நல்ல பதவிகளை அமைச்சர் மூலம் பெற்றுத் தருகிறேன் என வாக்குறுதி அளித்து வருகிறாராம். கோவை செல்வராஜ் வீசியுள்ள வலையில், முன்னாள் அமைச்சர், மாஜி எம்.எல்.ஏக்கள் என பலர் இருக்கிறார்களாம். இதனால், விரைவில் பெரிய சம்பவங்கள் நடக்கலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

 ஏற்கனவே ரூட்

ஏற்கனவே ரூட்

அதிமுக மகளிர் அணி மாநில பொறுப்பில் இருந்த விஜிலா சத்தியானந்த், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதேபோல, மகளிர் அணி, இளம் பெண்கள் பாசறையின் மாநில பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு இழுப்பதற்கான ரூட்டை பலமாக அமைத்து வருகிறாராம் கோவை செல்வராஜ். ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெறுவதற்காக கோவை செல்வராஜ், இந்த வேலையில் தீவிரமாக இயங்கத் தொடங்கி இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+