கைகலப்பு வரை வந்தாச்சு.. கரூர்காரங்களுக்கு கோவையில் என்ன வேலை.. கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்
கோவை: ‛‛கோவையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தட்டிக்கேட்கும் பாஜகவினர் மிரட்டப்படுவதால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர பிரச்சாரம்
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன், பாஜக அண்ணாமலை, காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் அழகிரி உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பணம் கொடுக்கும் திமுக
கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள்(திமுக) வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதனை கேட்கும் பாஜகவினரை மிரட்டுகின்றனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் சில இடங்களில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி செயல்படுகின்றனர்.

அண்ணாமலை பிரசாரம்
மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் நினைக்கின்றனர். மேலும் நாளை முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முழுமையாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிறுவாணி அணைமுழு கொள்ளளவை எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோவையில் உள்ள விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்'' என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications