கோவையில் மீன் பிடிக்க போனால், அங்கே "இது" உட்கார்ந்திட்டு இருக்கு.. மேட்டுப்பாளையத்துக்கு விருந்தாளி

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதலைகளின் நடமாட்டமானது, பொதுமக்களுக்கு அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினர், பீதியை கிளப்பி கொண்டிருக்கும் முதலையை பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பட்டக்காரனூர் என்ற கிராமம்.. இங்குள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பிறகு மறுகால் பாய்ந்து பவானி ஆற்றில் வந்து சேர்கிறது..

kovai mettupalayam

ஆனால், கடந்த வருடம் பெய்த கனமழையின் தண்ணீரே இன்னும் குட்டை போல தேங்கி நிற்கிறது. பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாகவே, கிட்டத்தட்ட 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி நிற்பதால், முதலை ஒன்று பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், அந்த முதலையை கண்ணெதிரே பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தந்தார்கள்.

முதலைகள்: இதையடுத்து, வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.. ஆனால், அந்த குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடந்ததால், முதலையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாதபடி, வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றார்கள்.

எனினும், கிராம மக்களுக்கு பயமும், கலக்கமும் நீங்கவேயில்லை. இதனிடையே, பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்த்தபோது, நீர்வழிக்குட்டையில் இன்னொரு முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்ல, தற்போது வெயில் அதிகம் வாட்டியெடுப்பதால், குட்டையிலிருந்த தண்ணீரும் வற்ற ஆரம்பித்துவிட்டது. இதனால், அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடந்தன.

நீர்க்குட்டை: எனவே, மறுபடியும் தகவலறிந்து வந்த சிறுமுகை வனத்துறையினர், நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்து, அந்த முதலைகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்து, பத்திரமாக மீட்டு சென்றனர். இதற்கு பிறகே, அங்கிருந்த மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு, குட்டையில் இறங்கி மீன்களையும் பிடித்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், இன்றும் மீன் பிடிப்பதற்காக குட்டை பகுதிக்கு வந்த கிராமவாசிகள், வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.. அப்போது, வலையின் பக்கத்திலேயே, ஏற்கனவே தென்பட்ட, அதே ராட்சத முதலை இருப்பதை கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்..

ஊற்று நீர்: தற்போது ஊற்று நீரால் குட்டை நிரம்பி வருகிறது... அதனால்தான், இந்த குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம் இருக்கிறதாம்.. ஏற்கனவே 2 முதலைகளில் ஒன்றை வனத்துறை பிடித்துவிட்ட நிலையில், ஒரு வாரத்திற்குள்ளே இன்னொரு முதலை வந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முதலையையும் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+