பாசப் போராட்டம்.. தாயை தேடி அலைந்து திரிந்த குட்டி யானை.. தாய் ஏற்காத நிலையில் முதுமலையில் சேர்ப்பு!
கோவை: மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை, காடு முழுவதும் தாயை தேடி அலைந்து திரிந்தது. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், வனத்துறையினர் குட்டி யானையை முதுமலைக்கு கொண்டு சென்றனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தரையில் படுத்துக் கிடந்த 40 வயது பெண் யானைக்கு, 5 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1 ஆம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து, வனப்பகுதிக்குள் சென்றது.

பின்னர், தாய் யானை உடல் நலம் தேறிய நிலையில் கடந்த 3 ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை, கடந்த சில நாட்களாக தனது தாயை தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.
இதனைத்தொடர்ந்து தாய் யானையை தேடி, குட்டி யானையுடன் வனத்துக்குள் வனத்துறையினர் பயணம் மேற்கொண்டனர். இதற்காக, ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பல முறை முயன்றும் தாய் யானை, குட்டியை ஏற்க மறுத்தது. இதையடுத்து, மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

குட்டி யானை மீது மனிதர் வாடை இருப்பதால் குட்டியை மற்ற யானை கூட்டங்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். குட்டி யானை, தாய் யானையுடனோ அல்லது யானை மந்தைகளுடனோ சேர்க்கப்படாத நிலையில் அந்த குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குட்டி யானையை வனப்பகுதியில் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தினால் குட்டி யானையானது முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று அதிகாலை 3.40 மணியளவில் குட்டி யானைக்கு பால் மற்றும் உணவு வழங்கப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர், அதன் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் வாகனம் மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications