Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை.. சொதப்பிய ப்ளான்கள்.. ஆண் நண்பர் வேற.. "ஆக்சா பிளேடுடன்" பாய்ந்து.. மேடம் இப்ப ஜெயிலில்

Subscribe to Oneindia Tamil

கோவை: மாஸ்டர் பிளான் போட்டு, கணவரை தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார் ஒரு நடிகை.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. எனினும் தற்போது அந்த நடிகை ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது நல்லகவுண்டன் பாளையம்... இங்கு வசித்து வருபவர் ரமேஷ்... இவர் ஒரு கூல்டிரிங்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறார்.

இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரம்யா என்பவருடன் திருமணம் நடந்தது.. கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ரம்யா.. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 ஜாலி தம்பதி

ஜாலி தம்பதி

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. தம்பதிக்குள் நிறைய தகராறுகள் ஏற்பட்டுவிடவும், கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா பீளமேடு பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.. ஆனால் தன்னுடைய குழந்தைகளை ரமேஷிடமே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.. சின்ன வயதில் இருந்தே ரம்யாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்ததால், அதற்கான முயற்சியிலும் இறங்கினார்..

 கண்ணெதிரே தோன்றினாள்

கண்ணெதிரே தோன்றினாள்

எனவே, கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த டேனியல் என்ற சந்திரசேகருடன், ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது... இதையடுத்து சில வாய்ப்புகளும் ரம்யாவுக்கு வர ஆரம்பித்தன.. குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சுந்தரி, 'கண்ணெதிரே தோன்றினாள்' போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரம்யா.. இதையடுத்து குறுகிய நாட்களிலேயே பிசியான நடிகையாகவும் மாறிவிட்டார்.. இதனிடையே, ரமேஷ் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டார்.. எனவே, மாமியார் வீட்டுக்கு சென்ற ரமேஷ், ரம்யாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

 பாய்பிரண்ட்

பாய்பிரண்ட்

குழந்தைகளையும், தன்னுடைய அம்மாவையும் பார்த்துக் கொள்ளுமாறு ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் வீட்டுக்கு ரம்யாவும் வந்தார். ஆனால், இப்போது ரம்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது.. ஒருநாள் ரம்யா, தன்னுடைய ஆண் நண்பர் டேனியல் என்ற சந்திரசேகரனுக்கு போனை போட்டு, தன்னுடைய கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் கொடுமைப்படுத்துவதாகவும், அவரிடம் டார்ச்சர் அனுபவிக்க முடியவில்லை.. அதனால், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது..

 ஆக்சா பிளேடு

ஆக்சா பிளேடு

அதன்படியே, சம்பவத்தன்று இரவு ரம்யாவும் ரமேஷும் பைக்கில் சென்றபோது, திடீரென சந்திரசேகர் அவருடைய இன்னொரு பைக்கில் வேகமாக வந்து, ரமேஷ் பைக்கின் மீது மோதியுள்ளார்.. இதில் நிலைகுலைந்து ரமேஷ் கீழே தடுமாறிவிழவும், அவரை கடுமையாக தாக்கி, கைகளையும் உடைத்துள்ளார்.. அவரது அவரின் கை, கழுத்து பகுதிகளில் ஆக்சா பிளோடால் அறுத்து விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து ரமேஷ் ரத்தவெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாருக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்து, விசாரணையை மேற்கொண்டனர்..

 சீரியல் நடிகை

சீரியல் நடிகை

முதல் விசாரணையே ரம்யாதான்.. கேள்வி கேட்டுதுமே உளற ஆரம்பித்துவிட்டார் ரம்யா.. இதையடுத்து, ரம்யா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவும், அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.. அப்போது, சந்திரசேகருடன் சேர்ந்து ரமேஷை அவர் கொலை செய்ய முயற்சி செய்தது அம்பலமானது.. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ரம்யா போலீசில் சொல்லும்போது, நான் சீரியல்களில் நடிப்பது கணவருக்கு பிடிக்கவில்லை.. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.. சீரியல்களில் என்னை நடிக்கக் கூடாது என்று சொன்னதால்தான், என்னுடன் பணியாற்றும் ஆண் நண்பரான துணை நடிகர் டேனியல் என்பவரை வைத்து கணவர் ரமேஷை தாக்கினேன்" என்று கூறியுள்ளார்..

அம்பலம்

அம்பலம்

அதுமட்டுமல்ல, இதற்கு இந்த கொலை முயற்சிக்கு இன்னொரு காரணமும் உள்ளதாம்.. பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டை, டேனியல் 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டிருக்கிறார்.. அதற்கு ரமேஷ் மறுத்துவிட்டாராம்.. இந்த ஆத்திரத்தில்தான் ரம்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, ரமேஷிடம் இருந்து மிரட்டி குறைந்த விலைக்கு வீட்டை விலை பேச முடிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, ரம்யா மற்றும் டேனியல் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்... துணை நடிகரின் உதவியுடன், கணவரை கொலை செய்ய துணை நடிகை திட்டம் தீட்டியதும், கைதாகி உள்ளதும், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+