கோவை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம்.. கையும் களவுமாக சிக்கிய வெளிநாட்டு அழகிகள்.. போலீஸ் ஆக் ஷன்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் வெளிநாட்டு பெண்களை விபாரசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களை கோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறையின் துணை ஆணையர் (வடக்கு) ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீஸார் எடுத்து வருகின்றனர். இருப்பினும் புதிய புதிய உத்திகளைப் பயன்படுத்தி களமிறங்குகின்றனர் சமூக விரோதிகள். அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு விடுதிகளில் அவ்வப்போது விபசாரம் நடப்பதும் போலீஸார் கைது செய்வதும் நடந்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் புரோக்கர்களை சிறையில் அடைத்தும், மீட்கப்படும் பெண்களை காப்பகத்தில் ஒப்படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில், ஆல் இந்திய குரூப் என்ற வாட்ஸ் அப் குழு மூலம் வெளிநாட்டு அழகிகளை வைத்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இரண்டு புரோக்கர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வருவதகாக கோவை மாநகர காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, கோவை தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த விபசாரத்தில் பின்னணியில் இருந்து இயக்கியது சிக்கந்தர் பாஷா என்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மேற்குவங்கத்தில் பதுங்கியிருந்த சிக்கந்தர் பாதுஷாவை (41) மற்றும் ஏஜென்ட் ஸ்டீபன் ராஜ் (30) ஆகிய இருவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றை ஏற்படுத்தி விபாசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதது தெரியவந்துள்ளது. மேலும், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்து வந்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல 8 ஸ்டார் ஹோட்டல்களில் நீண்டநாட்களா தங்கியிருந்தவர்கள் யார், இந்த நட்சத்திர விடுதிகளுக்கு வந்து சென்றவர்கள் யார் யார் என்ற தகவல்களை போலீஸார் சேகரித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் குழு மூலம் பாலியல் தொழிலில் செய்த வந்த நபர்களிடம் இருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள், 7 வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகர காவல் துறையின் துணை (வடக்கு) ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இந்தியா முழுவதும் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களைப் பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சிக்கந்தர் பாதுஷா மீது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 வழக்குகள் கோவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவர் மீது பதிவு செய்யப்பட்ட விபச்சார குற்ற வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. பிணையில் வரமுடியாத பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டும் நிலுவையில் உள்ளது.
விபச்சார தொழிலில் கிடைத்த லாப பணத்தில் சிக்கந்தர் பாஷா பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது ஹோட்டல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications