Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. என் நிலைமையப் பாருங்கடா.. கோவை புள்ளிங்கோ மாணவரின் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

கோவை: பெற்றோர் பேச்சை கேட்டு ஒழுக்கமாக படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் கத்தி எடுத்துக் கொண்டு சுற்றியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழ வைத்து கடவுள் தன்னை தண்டித்துவிட்டதாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்லூரி மாணவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக கல்லூரி செல்லும் மாணவர்கள் என்றாலே சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தனது நண்பர்களுடன் சேர்ந்துவிட்டாலே பள்ளி, கல்லூரி, பேருந்து என அனைத்துப் பகுதிகளிலும் பாட்டு, நடனம், கலாய்ப்பதில் ஈடுபடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சில நேரம் காவல் துறையினர் இதனை கண்டிப்பதும், அட்வைஸ் செய்து அனுப்பி வைப்பதும் வழக்கம்.

coimbatore student video

இவை அனைத்துமே எல்லை மீறாத வரையில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு, மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கோவை தனியார் கல்லூரியில் கத்தியை சுழற்றி கெத்துக் காட்டி மாவுக்கட்டு வாங்கிய மாணவரின் பரிதாப நிலை குறித்த வீடியோ தப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஓணம் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளதால் இங்குள்ள கல்லூரிகளில் கேரள மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் படித்து வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

ஓணம் கொண்டாட்டத்தின்போது ரோகித் என்ற இளைஞர் திடீரென கத்தியைச் சுழற்றி மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார். இதில், 3 மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரியின் முன்னாள் மாணவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கல்லூரியின் முன்னாள் மாணவர் வாகன விபத்து ஒன்றில் சிக்கி கை உடைந்த நிலையில் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, போலீஸார் காவல் நிலையத்தில் ரோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும், பழைய ஐடி கார்டை காட்டி ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், அப்போது மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சுழற்றி மாணவர்களைத் தாக்கியயுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த ரோஹித், எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என சினிமா வசனத்தைப் பேசியதோடு, படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் கத்தி எடுத்ததால்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன். இந்த செயலுக்காக கடவுள் தன்னை பைக்கில் இருந்து கீழே விழ வைத்து கையை உடைத்து விட்டதாகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

மாணவர்கள் படிக்கும் காலத்தில் பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தவறான செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் மாணவர் ரோகித் பேசும் இந்த வீடியோவை போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாப் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+