ரேஷன் கார்டு.. கோவை மக்களே நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன்.. வீடு தேடி வரும் நல்ல செய்தி
கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் கோவை மாவட்டத்தில் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், சரிபார்த்து ஆய்வு செய்து பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து தனி ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன..

இந்நிலையில் கடந்த சில மாங்களாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து, புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார்களாம்.. அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் விறுவிறுப்பாக இறங்கி உள்ளனர்.
முன்பு ரேஷன் கார்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுவதால் அவை சென்னையில் மட்டுமே தயராகுவதால் அங்கிருந்த தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை காரணமாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்க போகிறது.
கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரப்போகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications