கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி
பொள்ளாச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளது.
Recommended Video
கோயம்பத்தூர்: பொள்ளாச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது.

மழை என்ன
இதனால் பொள்ளாச்சியில் பெரிய அளவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. முக்கியமாக ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் நாகரூத்து கிராமத்திலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நாகரூத்து கிராமத்திற்கு ஒரு பக்கம் மலை இருக்கிறது. இதன் மீதும் ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் கிராமத்திற்கு இன்னொரு பக்கமும் இன்னொரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.

என்ன
பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்திற்கான ஆறு இங்குதான் ஓடுகிறது. அதேபோல் மேலணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கும் இது வழியாகத்தான் தண்ணீர் செல்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இந்த திருமூர்த்தி அணை செல்லும் ஆற்றில் பெரிய அளவில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதுதான்
அப்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு அந்த ஆற்றில் ஒரே நேரத்தில் நிறைய மரங்கள் விழுந்து உள்ளது. இதனால் ஆற்றில் அதிக அளவில் பெரிய பெரிய மரங்களும், மணலும் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு சுவர்களை மீறி ஆற்றில் இருந்து நீர் வடிந்து ஊருக்குள் வந்து இருக்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.

குழந்தை
இந்த நாகரூத்து வெள்ளம் ஒரே நொடி வந்து, அப்படியே பல வீடுகளை அடித்து சென்றுள்ளது. வந்த வெள்ளத்தில் மொத்தம் 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் 1 குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்டு பலியானது. 12 பேர் இந்த வெள்ளத்தில் மோசமாக காயம் அடைந்தனர்.

எப்படி
இந்த வெள்ளத்தை நேரில் பார்த்தவர்கள், எப்போதும் போலத்தான் மழை பெய்தது. ஆனால் திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. அதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டதால் சுதாரிக்க முடியவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications