ஓசூர் விமான நிலையம்.. மத்திய அரசு ஆலோசிக்கிறது.. ஒரே வாரத்தில் ராம் மோகன் நாயுடு புது விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முழு ஒப்புதல் கொடுத்துவிட்டதாக கூறிய ராம் மோகன் நாயுடு, தமிழ்நாட்டிற்கு தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி பின் ஓசூர் மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. ஏற்கனவே டிவிஎஸ், டாடா, ஏதன், ஓலா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஓசூரில் தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி எளிமையாக்கும் வகையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டது.

Ram Mohan Naidu update on Hosur Airport

ஓசூரில் பேரிகை பாகலூர் பகுதியில் விமான நிலையத்தை அமைக்கலாம் என்று முடிவு செய்து தமிழக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. ஓசூரில் விமான நிலையம் வந்தால், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும் வேகமாக வளர்ச்சியை பெறும். அதேபோல் பெங்களூர் வளர்ச்சிக்கும் தமிழக அரசால் எளிதாக சவால் அளிக்க முடியும்.

இதனால் ஓசூர் விமான நிலையம் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்தது. ஆனால் தமிழக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமான நிலையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது.

இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் Udaan Yatri Cafe மற்றும் புதிய வசதிகளை தொடங்கி வைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வந்தார். இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் ஜிஐ டேட் பெற்ற பொருட்கள், கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவை திறக்கப்பட்டது.

அப்போது ராம் மோகன் நாயுடு பேசுகையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முழு ஒப்புதல் கொடுத்துவிட்டோம். ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிரதமர் மோடி கோவைக்கும், தமிழ்நாட்டிற்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார். கடந்த வாரம் ஓசூர் விமான நிலைய திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை அளித்த ராம் மோகன் நாயுடு, இப்போது திடீரென ஆலோசனையில் இருப்பதாக கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+