"எங்க பீஃப் கடைக்கு பர்மிஷன் கொடுக்க அவர் யாரு.." கோவை பாஜக நிர்வாகி மிரட்டல்! உரிமையாளர் ஆவேசம்
கோவை: கோவையில் உடையம்பாளையத்தில் மாட்டிறைச்சி பிரியாணியைத் தள்ளுவண்டியில் விற்ற தம்பதிக்கு அதே பகுதியில் வசிக்கும் பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்த அந்த தம்பதி, கடைக்கு பெர்மிஷன் தர அவர் யார் என்றும் பாஜகவில் இருப்பதால் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.
கோவையில் உடையம்பாளைய பகுதியில் மூன்று சந்திப்பு பகுதியில் ரவி - அபிதா தம்பதி தள்ளுவண்டியில் பீஃப் பிரியாணியை விற்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி இவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

மிரட்டல்:
மாட்டிறைச்சியை வீறக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும் மீறி விற்றால் 10 பேருடன் வந்து அடித்து உடைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும், வேறு எதாவது கடையைப் போட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அந்த தம்பதி சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடை நடத்தி வந்த பெண், "அவர் திடீரென சில ஆட்களுடன் வந்து மிரட்டினார். இதனால் எங்களுக்கு ரூ.6000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. சாதிய பிரச்சனை ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லி மிரட்டினார்கள். மேலும், நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதியைப் பெற்றே கடை வைத்தோம். ஆனால், இவர் தான் சம்பந்தமே இல்லாமல் ரோட்டில் கடை போட்டுள்ளோம் என ஆட்களுடன் வந்து மிரட்டிச் சென்றார்.
பெர்மிஷன் கொடுக்க அவர் யார்:
இது குறித்துக் கேட்டால் எங்களையே குறை சொல்கிறார். யாரைக் கேட்டு பீஃப் விற்கிறாய்.. உனக்கு யார் பெர்மிஷன் கொடுத்தார் என்றெல்லாம் கேட்கிறார். முதலில் பெர்மிஷன் கொடுக்க அவர் யார்.. எங்க ஏரியாவில் நாங்கள் கடையைப் போடுகிறோம். எங்களுக்கு எந்த தொழில் தெரிகிறதோ அதைத் தான் செய்ய முடியும். இதுதான் செய்ய வேண்டும் என்பதை அவர் சொல்லக்கூடாது அல்லவா..
இட்லி, தோசை போடு, மீன், சிக்கன் கடை போடு என்கிறார். எங்களுக்குப் பிரியாணி கடை தான் தெரியும். அதனால் அந்த தொழில் செய்கிறோம். நாங்கள் இந்த கடை போடக்கூடாது என அவர் சொல்ல என்ன ரூல்ஸ் இருக்கிறது.. அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. பீஃப் என்ன அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா?
பயப்பட மாட்டோம்:
அவர் சொல்வதற்கு எல்லாம் எங்களால் பயக்க முடியாது. எங்களுக்கு அதை இடத்தில் கடை வேண்டும். குறிப்பாக எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்.. கடைக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். கடை போட அனுமதியும் வேண்டும் அந்த நபரைக் கைது செய்ய வேண்டும். நாங்கள் ரோட்டில் தான் கடை போட்டுள்ளோம். பிரச்சினை என்றால் கார்ப்ரேஷன் ஊழியர்கள் தான் வந்து கடையை எடுக்கச் சொல்ல வேண்டும். அவருக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. பாஜகவில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக வந்து மிரட்டுவது எந்த விதத்தில் சரி" என்றார்.
கைது செய்ய வேண்டும்:
மேலும், ஊர்மக்கள் எங்களுக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஊர்மக்கள் அவர்களை எதிர்க்கத் தயங்குகிறார்கள் என்றும் மீன் கடை போட்டுள்ளவர்களிடம் எதுவும் தகராறு செய்யாமல் அவர்களிடம் மட்டும் வந்து பிரச்சினை செய்வதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக மிரட்டல் விடுத்த பாஜக ஓபிசி அணி மாநகர செயலாளர் சுப்பிரமணி மீது இரு பிரிவுகளுக்கு இடையே வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications