கோவையில் நிலம், வீடு வைத்துள்ளவர்களுக்கு வருகிறது மேஜர் திட்டம்.. சொத்து வரி கார்டு என்றால் என்ன?
கோவை: கோவையில் டிரோனில் 5டி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கட்டிடங்கள் படம் பிடிக்கப்பட உள்ளன. புவி அமைவிட விவரங்களுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகளால் கையாளப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கட்டிடம், இடம், எல்லை பரப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். இதன் அடிப்படையில் நிலம், கட்டிட உரிமையாளர்களுக்கு 'சொத்து வரி கார்டு' வழங்கப்பட உள்ளது. இந்த கார்டு தான் இனி வரும் காலத்தில் சொத்துக்கான துல்லியமான ஆதாரமாக இருக்கும்.
கோவை மாநகரில் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்ட (நக்சா) தொடக்க விழா கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நில அளவை பதிவேடுகள் துறை மண்டல துணை இயக்குனர் மோகன், உதவி இயக்குனர் சரவணன், நில அளவை அலுவலக நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்ததிட்டப்படி, டிரோனில் 5டி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கட்டிடங்கள் படம் பிடிக்கப்பட இருக்கிறது. புவி அமைவிட விவரங்களுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகளால் கையாளப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
'சொத்துவரி கார்டு'
அதில் கட்டிடம், இடம், எல்லை பரப்பு உள்ளிட்டு அனைத்து விவரங்களும் பதிவாகிவிடும். இதன் அடிப்படையில் நிலம் கட்டிட உரிமையாளர்களுக்கு சொத்து வரி கார்டு வழங்கப்படும். இந்த கார்டு தான் இனி வரும் காலத்தில் சொத்துக்கான துல்லியமான ஆதாரமாக இருக்கும். குறிப்பாக அடுக்குமாடி வீடுகளுக்கு தனி பட்டா கிடையாது. கூட்டு பட்டா தான் வழங்கப்படுகிறது. ட்ரோன் சர்வே முடிந்து 'சொத்து வரி கார்டு' வழங்கும் போது கட்டிடம் பரப்பு நில உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய துல்லியமான ஆவணங்கள் பதிவாகிவிடும்.
இந்தியாவில் 156 நகரங்களில் 4,142 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை பைலட் ப்ராஜெக்ட் ஆக செயல்படுத்த மத்திய அரசு ரூபாய் 194 கோடி ஒதுக்கி இருக்கிறது. நில அளவை செய்து தயாரித்த வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம், அதை உரிய விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும்.
இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நில ஆவணங்கள் வெளியிடப்படும். அனைத்து நடவடிக்கைகளிலும் முடிவடைந்த பின்னர் புவி அமைப்பை விட புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களுடன் சொத்து வரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள், நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
முதல் கட்டமாக கோவை நகரில் கணபதி பகுதியில் 19, 20, 29, 30, 31, 47, 48 ஆகிய 7 வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 73,263 கட்டிடங்கள், ட்ரோன் ஆய்வு செய்து நடத்தப்படும். 10.44 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 16 ஆயிரத்து 898 சப் - டிவிஷன் பகுதிகளில் இந்த ஆய்வு இருக்கும். ஒரு ஆண்டு காலத்தில் இந்த முன்னோடி ஆய்வுப் பணிகள் முடிக்கப்படும். நக்சா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் 7 வார்டுகள் முடிவடைந்த பிறகு மற்ற வார்டுகள் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications