கோவையில் திமுக முக்கிய நிர்வாகி வீட்டில் ஐ.டி ரெய்டு.. வீடு முழுவதும் சல்லடை போட்ட 10+ அதிகாரிகள்!
கோவை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மீனா லோகு வீட்டுக்கு 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு, அலுவலகம், கார் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் மீனா லோகு வீட்டில் இருந்து எந்தப் பொருளும் கைப்பற்றப் படவில்லை எனக் கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு, திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். கோவை மேயர் பதவிக்கான ரேஸிலும் இருந்தார் மீனா லோகு. திமுக முன்னணி நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் பைனான்ஸ் தொழில் செய்து வருவதுடன், அதிமுக ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!











Click it and Unblock the Notifications