"எல்லாரும் வாபஸ் வாங்குங்கள்! என்னை ஜெயிக்க வைங்க!" போட்டி வேட்பாளர்களிடம் சுயேச்சை நூதன பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: அனைத்துக் கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்து, தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென, சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் அதிகளவிலான விஸ்வகர்மா மக்கள் வசித்து வருகின்றனர். எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விஸ்வகர்மா மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

Independent Candidate

தங்க நகைத் தயாரிப்பு தொழிலில் போதியளவு வேலைகள் இல்லாததால், அவர்களது குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை, வாபஸ் பெறச் செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போதுதான் விஸ்வகர்மா மக்களின் பிரநிதியாக இருந்து சமூக மக்களின் குறைகளை எடுத்துக்கூறவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு, வாய்ப்பாக இருக்கும் என்றார்.

மக்களிடம் ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடையே, வேட்பாளர்களையே வாபஸ் பெற வேண்டுகோள் வைத்த சுயேச்சையால் அரசியலில் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் எங்கப்பா நீ இருந்த என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்பார்கள். ஆனால், நம் ஊர் சுயேச்சை வேட்பாளர் ஒருவரோ, "தேர்தல் வரும் முன்னே, வெற்றியைக் கொடுங்க கண்ணே" என புது ரூட்டைப் பிடித்துள்ளார். பொதுவாக வேட்பாளர்கள் மக்களிடம் தான் ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் நம்ம 'தெய்வீகத் திருமகன்' ஒரு படி மேலே போய், "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தலைவர்களே... நீங்க ஏன் அநியாயத்துக்குப் போட்டியிட்டு காசை வேஸ்ட் பண்றீங்க? ஒழுங்கா உங்க வேட்பாளர்களை வாபஸ் வாங்கச் சொல்லிட்டு, எல்லாரும் சேர்ந்து என்னை வெற்றி பெறச் செய்யுங்க" என ஓப்பனாகவே டீல் பேசியிருக்கிறார்.

இதைக் கேட்டு அரசியல் தலைவர்கள், "நாங்க என்னடான்னா தொகுதிப் பங்கீட்டுல மண்டையைப் பிச்சிக்கிட்டு இருக்கோம், நீ இப்படி ஜாலியா வந்து ஐஸ்க்ரீம் கேக்குற மாதிரி எம்எல்ஏ பதவி கேக்குறியேப்பா" எனத் திகைத்துப் போயுள்ளனர்.

இந்தச் சம்பவம் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், "தம்பிக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல" என்றும், "அந்த மனுஷன் சொல்றதும் கரெக்ட் தான், எதுக்கு ஊருக்குள்ள நாலஞ்சு கட்சிக்காரங்க சண்டை போட்டுக்கிட்டு? மொத்தமா இவருக்கே ஓட்டைப் போட்டுட்டு தேர்தல் கமிஷன் லீவு விட்டுட்டுப் போகலாம்" என்றும் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

"அனைத்துக் கட்சித் தலைவர்களும் கைகோர்த்து என்னை அரியணையில் ஏற்ற வேண்டும்" என்ற இவரின் இந்த அன்பு வேண்டுகோளைக் கேட்டு, தேர்தல் ஆணையமே சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகத் தகவல். எது எப்படியோ பாஸ், இப்போதைக்கு இந்தத் தேர்தலோட 'காமெடி ஸ்டார்' இந்த சுயேச்சை வேட்பாளர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+