கலைந்த தலை.. தலைப்பாகை இல்லை.. சோர்வுடன் ஜக்கி வாசுதேவ்.. பரபரப்பை கிளப்பிய போட்டோ
Recommended Video
கோவை: ஆஸ்பத்திரி கட்டிலில் கலைந்த தலையுடனும், தலைப்பாகை இல்லாமலும், சோர்வுடனும், ஜக்கி வாசுதேவ் படுத்து கிடக்கும் போட்டோவை பார்த்ததும் பக்தர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.
ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர் ஜக்கி வாசுதேவ். இவர் கோவையில் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, தொண்டு நிறுவனம் ஆகும்.
உலகின் மூலை முடுக்கில் எல்லாம், யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதை தவிர சமூக மற்றும் சுற்றுபுற நல செயல்பாடுகளிலும் தன்னுடைய ஆர்வத்தையும், பங்களிப்பையும் அளித்து வருகிறது.

ஆஸ்பத்திரி
இந்நிலையில், ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. ஜக்கி வாசுதேவ் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதாக திடீரென பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவியது. அந்த போட்டோவில் ஜக்கியின் தலைமுடி கலைந்துள்ளது. வழக்கமாக தலையில் அணியும் தலைப்பாகை இல்லை. முகமும் பார்ப்பதற்கு சோர்வாக இருந்தது.
பொய்
இந்த போட்டோ உலகம் முழுக்க வைரல் ஆகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் இது சுத்த பொய் என்பதும், ஜக்கி சுகமாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கம்போல, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விளக்கம்
இதையடுத்துதான் பக்தர்கள் நிம்மதி ஆனார்கள். பிறகு ஏன் இப்படி ஒரு போட்டோ வெளியிடப்பட்டுள்ளது என்று ஈஷா யோகா மையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

திருஷ்டி
அதற்கு, கருணாநிதிக்கு இப்படித்தான் அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அதனால்தான் அவர் ரொம்ப வருஷம் வாழ்ந்தார். அதேபோல, ஜக்கிக்கும் உடம்பு சரியில்லை என்று செய்தி வந்தால், அவர் புகழ் மேல் இருக்கிற திருஷ்டி கழிந்துவிடும். அதுக்காகத்தான் இந்த செய்தி பரவியது" என்கிறார்களாம்.
இதெல்லாம் உண்மையோ, பொய்யோ தெரியவில்லை.. இருந்தாலும், திருஷ்டி கழிக்க இப்படியா பண்ணுவாங்க?!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications