உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது.. அரசியலில் கத்துக்குட்டி! மத்திய அமைச்சர் எல்.முருகன் பாய்ச்சல்!
கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவையை இன்று கோவை ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத ரயில் சேவை வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை ரயில்வே அமைச்சரிடம் எடுத்து சென்று ஒரே மாதத்தில் ஒப்புதல் பெற்று ரயில் சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை மிகவும் வேகமாக இயங்கி வருகிறது. இந்த ஆண்டு நிதி மட்டும் 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய மேம்பாட்டுக்கு மட்டும் 1,896 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவைக்கு மட்டும் 70 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.” எனத் தெரிவித்தார்.
ஏடிஎம் மெஷினா? அப்பா வீட்டு காசா?: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நிதி கோரிய நிலையில், மத்திய அமைச்சர், மாநில அரசுகள் நிதி கேட்டதும் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா என்று கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களை சந்தித்தபோது அதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், அவர்கள் அப்பன் வீட்டு காசை நாங்கள் கேட்கவில்லை. தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என்று கூறினார்.
கேட்டது 27,700 கோடி.. 1 ரூபாய் கூட தரல.. மாற்றாந்தாய் மனப்பான்மையில் மத்திய அரசு: உதயநிதி தாக்கு!
உதயநிதியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த நிலையில், அப்பன் என்ற வார்த்தை கெட்டவார்த்தையா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பிக் கேட்டார். மேலும், மரியாதைக்குரிய நிதி அமைச்சர் அவர்களின் மரியாதைக்குரிய அப்பாவின் காசை ஒன்றும் நாங்கள் கேட்கவில்லை என்றும் பதில் கொடுத்தார்.
எல்.முருகன் கோபம்: இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது. இவர் அந்த அளவுக்கான ஆள் கிடையாது. இவர் ஒரு கத்துக்குட்டியாக உள்ளார். அரசியலில் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. மத்திய அரசோடு இணைந்து வேலை செய்யும்போது தமிழ்நாடு அரசுக்குதான் பலன் கிடைக்கும்.
அமைச்சருக்கான தரத்தை உதயநிதி ஸ்டாலின் குறைத்துவிட்டார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும். குதர்க்கமாக பேசக்கூடாது. கேலி, கிண்டலாக பேசி அமைச்சருக்கான தராதரத்தை உதயநிதி குறைத்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.
-
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
15 நாட்களில் 25 கொலைகள்.. இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்












Click it and Unblock the Notifications