300 கோடி ரூபாய் மோசடி.. கோவையில் மிஸ்டர்.டுபாக்கூர் மீது பகீர் புகார்.. ட்ரேடிங் ஆப் பரிதாபங்கள்..!
கோவை : கோவையில் டிரேடிங் ஆப் மூலம் அதிகளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றிய யூடியூபரான மிஸ்டர்.மணி என்ற விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் புகார் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போதைய செல்போன் யுகத்தில் வேலைகள் அனைத்தும் எளிதாகி விட்டது போல, உழைப்பில்லாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடத்தில் அதிகமாகி வருவது போலவே மோசடிகளும் அதிகமாகி வருகின்றன.
நூற்றுக்கணக்கான ஆன்லைன் கேம்கள் மூலம் வீட்டிலிருந்தே லட்சாதிபதி ஆகிவிடலாம் என விளம்பரங்களைத் மாற்றி மாற்றி காண்பித்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கும்பல்களும் அதிகரித்து வருகிறது.

கோவையில் மோசடி
இதேபோல்தான் கோவையில் யூடியூப் சேனல் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர் டிரேடிங் ஆப் மூலம் அதிகளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றிய யூடியூபரான மிஸ்டர்.மணி என்ற விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் புகார் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் தான் தற்போது இந்த மோசடிப் புகாரில் சிக்கி பரபரப்பை கூட்டி உள்ளவர்.

மிஸ்டர்.மணி சேனல்
விமல்குமார் என்பவர் மிஸ்டர்.மணி என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சேனலில் நேரலை செய்கிறேன் எனக்கூறி காளப்பட்டி பகுதிக்கு அவ்வப்போது செல்லும் விமல்குமார் அங்குள்ள பொது மக்களிடம் பணத்தை போரெக்ஸ் டிரேடிங் எனப்படும் ஆன்லைன் ஆப்-ல் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து அவரிடம் பலரும் பணம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அப்போது அதிக பணம் கிடைத்ததால் ஆசையில் தொலைத்து மகிந்த விமல் குமார் தமிழகம் முழுவதும் தனது ஆக்டோபஸ் வலையை விரிக்கத் தொடங்கியுள்ளார். கோவை மட்டுமல்லாது திருச்சி தஞ்சாவூர் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்டம்தோறும் அலுவலகங்களை அமைத்துள்ளார்.

இண்ட்ரோ ப்ரோக்கர்
இண்ட்ரோ ப்ரோ எனப்படும் அறிமுக புரோக்கர்களை நியமித்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமும் விமல் அளித்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என ஆர்வத்துடன் பணியாற்றியவர்கள் மாநிலம் முழுவதும் சுமார் 300 பேரை திரட்டி ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளனர். அதிகமான பணம் கைக்கு கிடைத்ததை அடுத்து வேலையில் அமர்த்தியவர்களுக்கு சம்பளம் வழங்காத மிஸ்டர்.மணி எனப்படும் விமல் குமார், முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் நீண்ட காலம் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து ஊழியர்களும் பாதிக்கப்பட்டோர் மிஸ்டர் மணி விமல் குமாரையும் அவரது மனைவியையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போனது.

ஆட்சியரிடம் புகார்
இதையடுத்து தங்களிடம் பணம் பெற்ற நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்ததை அடுத்து கோபம் அடைந்த, மதுரை தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் அளித்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த புகார் அளித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications