Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘அந்த தம்பிகள் ஒவ்வொருவரும்’ - விஜய் கூட்டத்திற்கு அன்பில் மகேஷ் கொடுத்த ‘நச்’ பதில்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஏற்கனவே அவர் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியுள்ளார். திருச்சியில் பேசும்போதும், அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். திமுக வலுவாக உள்ள திருச்சியில் விஜய்க்கு ஆதரவாக கூட்டம் கூடியிருப்பது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, தவெக கட்சிகள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சியில் திமுக வலிமையாக இருக்கும் பகுதி. அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் மாதிரியான முக்கிய தலைவர்கள் இருக்கும் பகுதியாகும்.

minister-anbil-mahesh-spoke-about-vijay-s-trichy-visit

ஆசிரியர் தகுதி தேர்வு

அங்கு விஜய் பேசுவதை காண்பதற்காக, நேற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். இது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. திமுக வலுவாக உள்ள பகுதியிலேயே விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடியது, தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார். இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மிக விரைவாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

மத்திய அரசு வஞ்சிக்கிறது

மாநில அரசு நம்முடைய வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம். பள்ளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். கடந்த இரு வருடங்களாக அவர்களின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறார்கள். அதைக் காரணம் காட்டி நிதியை ஒதுக்காமல் பாரபட்சம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் நலன்கள் பாதிக்க பாதிக்காத வகையில் திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே வேளையில் மத்திய அரசின் அதிகாரப் போக்குக்கு எதிராக சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் பேசிவிட்டோம். ஆனாலும் இதுவரை நிதியை கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

அரசின் திட்டங்கள்

விஜய் பேசியதை நான் இன்னும் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. விஜய் வருகையின்போது கூட்டம் அதிகளவில் வந்திருப்பதாக சொன்னார்கள். அதை பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை சொல்கிறேன். கூட்டமாக அவரை பார்க்க வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். தவெக கூட்டத்திற்கு சென்ற அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகளாக தான் இருப்பார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாகவோ, மகளிர் உதவித் தொகை மூலமாகவோ, காலை உணவுத் திட்டம் மூலமாகவும், மகளிர் பேருந்து திட்டம் மூலமாகவும் அவர்கள் குடும்பத்தினர் மொத்தமாக பயனடைந்திருப்பார்கள். அதன் காரணமாக தேர்தலின்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதைத்தான் திராவிட மடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+