கோவையில் 40 நிமிட பயணம் இனி 4 நிமிடம் தான்.. காட்சிகள் மாறின.. உக்கடத்தில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
கோவை: கோவை சுங்கம் பைபாஸ் சாலை இறங்கு தளம் திறக்கப்பட்டுள்ளதால், உக்கடத்தில் ரூ.482 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் கோவையில் நெரிசல் இன்றி வாகன ஓட்டிகள் பயணிப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் தேவைப்படவில்லை. வெறும் 4 நிமிடத்தில் கடந்து செல்ல முடிகிறது.
கோவை மாநகரில் உக்கடம் என்பது மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது. ரயில் நிலையம், பேருந்துநிலையம், கடை வீதிகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதேபோல் கேரளாவிற்கு செல்லும் வழி, பொள்ளாச்சி செல்லும் வழி, பாலக்காடு செல்லும் வழி, திருச்சி சாலை எல்லாமே உக்கடத்தை தாண்டித்தான் செல்லும் வகையில் உள்ளது. நகரின் பெரும்பாலான சாலையும் உக்கடத்தில் தான் இணைந்து மற்ற பகுதிகளுக்கு செல்கின்றன.
இதனால் கோவையின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கோ, கிழக்கு பகுதிக்கோ செல்ல உக்கடத்தை கடந்து தான் மக்கள் செல்கிறார்கள். இதனால் எப்போதுமே உக்கடம் நெரிசல் மிகுந்த இடமாக இருக்கும். காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் இந்த சாலையில் வெறும் 4 நிமிடத்தில் போக வேண்டிய பாதையை கடக்க 30 முதல் 40 நிமிடம் வரை வரை கூட ஆகும். இதனால் வாகன ஓட்டிகள் பீக் அவர்ஸில் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்கள்.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.481 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2018ம் ஆண்டு முடிவு செய்யபட்டது. இந்த பாலம் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு வீச்சில் நடந்தது. இப்பாலத்தின் ஒரு பாதி, ஆகஸ்ட் 9-ந்தேதி முதல்வர் ஸ்டாலினால் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப் பட்டது. அதன்பிறகு உக்கடம் மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தொடங்கியதால் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருக்கிறது.
உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது. அதேநேரம் பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் உக்கடம் மேம்பாலத்தில் ஏறி மீன்மார்க்கெட் அருகே இறங்கின. அந்த இடத்தில் அனைத்து வாகனங்களும் ஒன்றாக இறங்கும் போது நெரிசல் ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உக்கடம் பஸ்நிலையம் வழியாக வரும் வாகனங்களும் சேரும் இடமாக இருந்ததால் உக்கடம் போலீஸ் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மேம்பாலம் திறக்கப்பட்ட போதிலும், அடுத்த நாளே போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஏனெனில் அந்த மேம்பாலத்தில் இருந்து திருச்சி ரோடு சுங்கம் பகுதிக்கு செல்வதற்கான பால பணிகள் முடிவடையாமல் இருந்தது. இதையடுத்து உக்கம் போலீஸ் நிலையம் அருகே கூடட நெரிசலை தடுக்க பஸ்கள் அனைத்தும் மீன் மார்க்கெட் அருகே திருப்பி விடப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் நெரிசல் குறைந்து வாகனங்கள் சென்று வந்தன.
இந்த சூழலில் உக்கடம் மேம்பாலத்தில் இருந்து கிழக்கே உள்ள சுங்கம் பகுதிக்கு செல்லும் பாலம் மற்றும் சாலை பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பாதை 5.5 மீட்டர் அகலத்தில் ஏறுவதற்கும், 5.5 மீட்டர் அகலத்தில் இறங்குவதற்கும் தனித்தனி வழிகளுடன் இருக்கிறது. மேம்பாலத்தில் இருந்து 180 மீட்டர் இறங்குதளம் இருக்கிறது. மின்விளக்குகள், மற்றும் தடுப்பு பலகைகள் பொருத்தும் பணிகள் அண்மையில் முடிந்தது.
இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த காரணத்தால், நேற்று காலை முதல் சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து மேம்பாலத்திற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுங்கத்தில் இருந்து பொள்ளாச்சி, குனியமுத்தூர், சுந்தராபுரம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறி பயணித்து வருகின்றன. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை. இதன் மூலம் ரூ.482 கோடியில் கட்டப்பட்ட உக்கடம் மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
உக்கடம் மேம்பாலம் அமைப்பதற்கு முன் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்தை கடந்து செல்ல முன்பு 40 நிமிடங்கள் வரை பிடித்தது. தற்போது மேம்பாலம் முழு பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பயண நேரம் 4 நிமிடமாக குறைந்திருக்கிறது. கோவையில் பொள்ளாச்சி, பாலக்காடு சாலை வழியாக வரும் வாகனங்கள் சுங்கம், சிங்காநல்லூர் மற்றும் திருச்சி ரோட்டிற்கு எளிதாக போக முடியும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications