5 மணி வரை தான் கடை.. கோவையில் அமலுக்கு வந்த கூடுதல் கட்டுப்பாடுகள்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
கோவை : கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் கடையை மூடாத வியாபாரிகளை போலீஸார் கடுமையாக எச்சரித்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
கோவையில் பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு விற்பனை காரணமாக நேற்று வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் மாலை 5 மணிக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கி வந்தன. தனிநபர் இடைவெளி இல்லை. பலர் முகக் கவசம் அணியவில்லை.

வணிகர்கள் கட்டாயம்
இதனால் அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸார் கடைகளை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்னர். மாவட்ட நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதன்பின்னரே வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

கோவை மாவட்ட ஆட்சியர்
இதனிடையே அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடையையும் மாலை 5 மணிக்குள் அடைக்க உத்தரவிட்டதால் அவர்கள் வேதனை அடைந்தனர்.மளிகைகடையை இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காய்கறி கடைகள்
கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த ஞாயிறு அன்று வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் | வீர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராஸ்கட் ரோடு
கோயம்புத்தார். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராபமூர்த்தி சாலை, சாரபேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு துடியலூர் சந்திப்பு. ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கதி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பார்சல் சேவை
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மொத்த கடைகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்டஉள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளா எல்லை
கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே மேற்கொள்ளப்படும். Random RTPCR பரிசோதனை மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோளா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

மளிகை கடைகள்
இதனிடையே கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். அனைத்து சுற்றுலாதளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications