கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா..ஆஹா.. மைல்கல்லுக்கு மாலை போட்டு படையல்! நம்ம ஊர் கோவைல தான்! கோவை குசும்பு இது தானா?

Google Oneindia Tamil News

கோவை : ஆயுதபூஜையையொட்டி கோவை தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி அருகே மைல்கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதி உள்ள பொதுமக்கள் ஆயுத பூஜை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

People decorated the milestone in Coimbatore and performed puja

பேரூர் சிறுவாணி சாலை பூலுவபபட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய மைல் கல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து புதிய மைல்கல் அங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்! படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்!

இதனால் உற்சாகமான அப்பகுதி மக்கள் மைல்கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். வாழை இலையில் படையல் பொறி, கடலை, பழங்கள் வைத்து வழிபாடு செய்தனர்.

மேலும் ஆயுத பூஜை என்பதால் மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி வாழை மரக்கன்றுகள் கட்டி சந்தன பொட்டு திருநீர் குங்குமம் பூசி மாலை அணிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ததாக பகுதி மக்கள் கூறினர். இதனையடுத்து அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

English summary
On the occasion of Ayudha Puja, photos of people performing special pooja at the milestone near Thondamuthur Poolupatti in Coimbatore and putting banana leaves on it are spreading rapidly on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X